கடும் சோதனையிலும் தளர்ந்துவிடாமல் சாதனை செய்த மருத்துவர்
2008ல் ஒரு திருமணத்திற்குச் சென்று விட்டு வரும்போது திருடன் ஒருவன் எங்களின் கார் மீது சுட்டதில் ஒரு குண்டு என் கையை துளைத்துக் கொண்டு கழுத்தில் போய் நின்றது. இதனால் ஏற்பட்ட பாதிப்பினால் என் உடலில் பாதிக்கு மேல் செயல் இழந்து விட்டது.
நீண்ட காலம் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு சக்கர நாற்காலியில் வீடு திரும்பினேன். எனக்கு ஏற்பட்ட பாதிப்பை நிரந்தரமாக குணமாக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
எனக்கு இரண்டே வழிகள் தான் இருந்தன.
1. சக்கர நாற்காலியோடு முடங்கி என்னை நானே நொந்து கொள்வது
2. மற்றவர்களின் உதவியோடு என்னுடைய இந்த சவால்களை வெற்றி கொள்வது
நான் இரண்டாவது வழியைத் தேர்ந்து எடுத்தேன். பேனாவையோ அல்லது புத்தகத்த்தையோ என்னால் கையில் எடுக்க முடியாவிட்டாலும், சக்கர நாற்காலியின் உதவியோடு எனது படிப்பை தொடர ஆரம்பித்தேன். என்னுடைய அம்மா, தனது சொந்த ஊரை விட்டு விட்டு என்னுடைய ஹாஸ்டல் இருக்கும் அப்போட்டாபாத் வந்து என்னோடு தங்கியதன் மூலம், தன் வாழக்கையில் மிகப் பெரிய தியாகத்தை செய்தார்.
ஒவ்வொரு நாளையும் சமாளிப்பது மிகவும் கடுமையான சவாலாகவே இருந்தது ஆனாலும் அல்லாஹ்வின் உதவியால் நான் MBBS மனோதத்துவத்தை சிறப்புப் பாடமாக வெற்றிகரமாக முடித்து தற்போது CMH முஸாபர்பாத்தில் வேலை செய்கின்றேன்.
"முன்னாள் இருந்தது போல் வாழ நீங்கள் ஆசைப் படுகின்றீர்களா?", என்று மக்கள் என்னிடம் அடிக்கடி கேட்பார்கள். நான் சொல்வதெல்லாம், "நான் தற்போது என்ன செய்து கொண்டிருக்கின்றேனோ அதையே தான், நான் நல்ல நிலையில் இருந்தாலும் செய்து கொண்டிருப்பேன். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆவல் தான் அப்போதும், இப்போதும். என்ன...நல்ல நிலையில் இருக்கும்போது ஒரு செயலை செய்ய எடுக்கும் நேரம் 2 நிமிடங்கள் ஆகுமென்றால், தற்போது பத்து நிமிடம் ஆகும். அவ்வளவுதான்."
வலிகளை விட்டும் சுதந்திரமானவர்கள் யாருமில்லை. நாம் ஒவ்வருவரும், ஒவ்வொரு நாளும் வாழ்க்கைப் போராட்டங்களை சந்தித்தே வருகின்றோம். அற்புதங்கள் நடக்கும் என்று எதிர்பார்த்து வாழ்க்கையை வீணடிக்க முடியாது. நாமே அற்புதங்கள்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval