ஜல்லிக்கட்டு போராட்டம் அரசியல் வட்டாரத்தையும், அதிகார வர்க்கங்களையும் ஒரு குலுக்கு குலுக்கியுள்ளது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், மாணவர்கள் தொடங்கிய இப்போராட்டத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் யாரையும் பங்கெடுக்க அனுமதிக்கவில்லை.
இதனால், அரசியல் கட்சிகள் என்ன செய்வதென்றே தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தனர். அதன்பிறகு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஒவ்வொரு இடங்களிலும் போராட்டங்களை நடத்த தொடங்கினர்.
அதேப்போன்று தான் திரை நட்சத்திரங்களையும் போராட்டத்தில் பங்கெடுக்க அனுமதிக்கவில்லை. மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள இந்த போராட்ட விழிப்புணர்வு அரசியல் ரீதியாகவும் பிரதிபலிக்கும் என்றும் ஒரு செய்தி வெளியாகின்றது.
அதாவது, மக்களிடம் அதிகமாக பகிரப்படும் செய்தி. அது என்னவென்றால், ஸ்டாலினும் வேண்டாம், சசிகலாவும் வேண்டாம், மோடியும் வேண்டாம், ராகுலும் வேண்டாம்.. இவர்கள் அனைவரும் பீட்டாவிடம் விலை போனவர்கள். 234 தொகுதியிலும் காளைமாட்டு சின்னத்தில் போட்டியிட மாணவர்கள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது.
அதேபோன்று, சகாயம் முன்னிலையில் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட வாய்ப்பிருக்கின்றதாம். சகாயம் அல்லது ராகவா லாரன்ஸ் முதல்வர் வேட்பாளர் ஆக வாய்ப்பு. இனி டெல்லியை போல தமிழகமும் லஞ்சம், ஊழல் இல்லாத மாநிலம் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.
இதுவெல்லாம், நடந்தால் தமிழகத்தில் ஒரு மாற்றம் ஏற்படும் என்றால், அதையே தமிழக மக்கள் விரும்புவார்கள். அதற்கு எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval