Saturday, January 7, 2017

இங்கிலாந்து ராணுவத்தால் நேதாஜி கொல்லப்பட்டார்


Image result for nethaji imageஇந்திய தேசிய ராணுவத்தை ஏற்படுத்தி ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக போராடிய

தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அவர், 1945–ம் ஆண்டு ஆகஸ்டு 18–ந்தேதி

தைபேயில் நடந்த விமான விபத்தில் இறந்தார் என்று கூறப்பட்டு வருகிறது. நேதாஜி வாழ்க்கை வரலாறு பற்றிய ரகசிய ஆவணங்களை கடந்த ஆண்டு மத்திய அரசு வெளியிட்டபோதும் அவர் எப்படி இறந்தார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.  இதுபற்றி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜி.டி. பக்ஷி, “போஸ்: தி இந்தியன் சாமுராய்–நேதாஜி அண்ட் தி ஐ.என்.ஏ. மிலிடரி அசஸ்மெண்ட்“ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:–

ஜப்பானுக்கான முந்தைய சோவியத் ரஷிய தூதர் ஜேக்கப் மாலிக் உதவியுடன் டோக்கியோவில் இருந்து நேதாஜி சைபீரிய பகுதிக்கு தப்பிச் சென்றார். அங்கு 3 வானொலி நிலையங்களையும் நிறுவினார். இது, பின்னர் இங்கிலாந்து ராணுவத்துக்கு தெரிய வந்தது. இதனால் நேதாஜியிடம் விசாரணை நடத்த தங்களை அனுமதிக்கவேண்டும் சோவியத் ரஷியாவிடம் கோரிக்கை வைத்தது. இந்த விசாரணையின்போதுதான் இங்கிலாந்து ராணுவத்தால் நேதாஜி சித்ரவதை செய்து கொல்லப்பட்டார். அவர் விமான விபத்தில் இறக்கவில்லை. இதற்கு மறுக்க முடியாத ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. 

இவ்வாறு அவர் கூறி உள்ளார். 


--தினத்தந்தி

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval