Saturday, July 15, 2017

இந்தியாவில் 10ல், 6பேர் போலியாக ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள்- ஆய்வில் அதிர்ச்சி.!

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான 'சேவ் லைப்' எனும் தனியார் அமைப்பு ஒன்று, இந்தியாவின் முக்கிய 10 நகரங்களில் நடத்திய ஆய்வில், இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ள ஒவ்வொரு 10 பேரில் ஆறு பேர் எவ்வித சோதனையுமின்றி ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் தொழில்நுட்பத்தின் வசதிகளின் அடிப்படையில் நடத்தப்படும் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வானது, போலியாக ஓட்டுநர் உரிமம் பெறவும், ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட உரிமம் பெறவும் ஏதுவாக உள்ளதாகவும் இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆய்வின் முடிவானது "இந்தியாவில் மக்கள் தங்களுடைய சாலை பாதுகாப்பு குறித்து அறிந்திடாதது உள்ளிட்ட காரணங்களினாலேயே உண்டானது எனவும், அரசு அதற்கான போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டுமெனவும் தெரித்துள்ளார்" 'சேவ் லைப்' அமைப்பின் தலைமை அதிகாரி பியூஸ் திவாரி.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval