Tuesday, July 11, 2017

ஒரு கணவனும், மனைவியும் செருப்பு கடைக்கு சென்றார்கள்....

கணவன் எல்லா செருப்பையும் பார்த்து விட்டு ரூ900 மதிப்புள்ள அழகிய செருப்பை தேர்ந்தெடுத்தார். அதுவரை அமைதியாகவே அந்த மனைவி இருந்தார்.

அந்த தேர்ந்தெடுத்த ரூபாய்.900 மதிப்புள்ள செருப்பினை பில் போட போகும் சமயம் பார்த்து, அந்த கணவர் தனக்கு இடது கால் செருப்பு மட்டும் போதும் அதற்கு ரூபாய்450 தருவதாகவும், அதற்கு மட்டும் பில் போட வேண்டும் என்று கூறினார்.

அதிர்ந்த கடைக்காரர், "ஏன்?" என்று கேட்டார். "500ரூபாய்க்கு மேல் உள்ள செருப்புக்கு GST ரொம்ப அதிகம்" என்றான்.

"அதுசரி … அப்ப வலது பக்க செருப்பை என்ன செய்வது?" என்று கேட்டார் கடைக்காரர்.

அதுவரை அமைதியாக இருந்த மனைவி, "அதை நான் வாங்கி கொள்கின்றேன். இந்த ருபாய்.450 தனியாக எனக்கு பில் போடுங்க!" என்றார்

கடைக்காரர் ரொம்பவே குழம்பி விட்டார்.

அதற்கு அந்த கணவன் & மனைவி நன்கு ஒரு விளக்கம் கொடுத்தனர்

கடைக்காரர் ரூபாய் 900க்கு பில் போட்டால் GST Rs.162 வரி கட்ட வேண்டும்.

Rs.450 + Rs.450 இரண்டு பில்லாக போட்டால் Rs.45 (Rs.22.50 + Rs.22.50) மட்டுமே வரியாக போட முடியும்.

எப்படி நம்ம மக்களின் அறிவு!! :

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval