Friday, July 28, 2017

வீதி விபத்துக்களில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் தமிழர்களே – அதிர்ச்சி தகவல்

வீதி விபத்துக்களில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் தமிழர்களே – அதிர்ச்சி தகவல் விபத்துக்களில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளதாக வெளியான  தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் வீதி விபத்துக்கள் அதிகம் நிகழும் மாநிலமாக தமிழகம் காணப்படுகின்றது என மத்திய அரசு அண்மையில் அறிவித்துள்ளது.
ஒரு மாதத்தில் சுமார் 19 ஆயிரத்து 500 விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் இதில் 16 ஆயிரத்து 750 விபத்துக்கள் இரு சக்கர வாகன விபத்துக்கள் என்றும்; பதிவாகியுள்ளது.
இதேவேளை சாலை விபத்துக்களில் காஞ்சிபுரம் மாவட்டம் முதலிடத்திலும், விழுப்புரம் மாவட்டம் இரண்டாம் இடத்திலும் சென்னை 4 ஆம் இடத்திலும் இருக்கின்றது.
குறிப்பாக காலை 9 மணி தொடக்கம் 11 மணி வரைக்கும் மாலை நேரத்தில் 5 மணி தொடக்கம் 8 மணி வரைக்கும் அதிகமான விபத்துக்கள் இடம்பெறுகின்றன.
தலைக்கவசம் அணியாமை, இளைஞர்களிடையே ஏற்படக்கூடிய போட்டி மனப்பாண்மை, வாகனங்களுக்கு இடையே போவது, அதிகரித்த வேகம் போன்ற காரணங்களினால் அதிகமான விபத்துக்கள் சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval