Tuesday, July 11, 2017

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மனித தலைகள், நேற்று நாட்டையே திரும்பி பார்க்க வைத்து இந்த கூட்டம் கூடியது எதற்கு தெரியுமா – பிரத்யேக காணொளி

GST வரியை திரும்பப் பெறக் கோரி நேற்று மாலை நாடே திரும்பி பார்க்கும் அளவிற்கு குஜராத் மாநிலம் சூரத்தில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது.
ஜவுளிக்கு பெயர் போன ஊர் சூரத், ஜவுளி துறையில் 5 முதல் 18.5 சதவிகிதம் வரை GST வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜவுளி துறை பெரிய அளவில் பாதிக்கும் எனக் கூறி GST வரியை திரும்பப் பெறக் கோரி நேற்று சூரத் ல் கண்டன பேரணி நடைபெற்றது.
இதில் எதிர் பார்க்காத வண்ணம் ஜவுளி துறையை சார்ந்தவர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் ஜிஎஸ்டி வரிக்கு எதிராக கோஷம் எழுப்பி கலந்து கொண்டதால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மனித தலைகளாக காட்சி அளிக்கும் வண்ணம் நாடே திரும்பி பார்க்கும் வகையில் பிரம்மாண்ட கண்டன பேரணியாக இந்த ஆர்ப்பாட்டம் மாறியது.
GST வரி நாட்டு மக்களிடம் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதையே இந்த பிரம்மாண்ட கூட்டம் காட்டுவதாக பொருளாதார வல்லூணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval