Tuesday, July 18, 2017

இறந்த உடலுடன் மூன்று மணிநேரம் சுற்றிய அரசுப்பேருந்து!

busகோயம்புத்தூரில் இருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் பணிமனைக்குச் சொந்தமான அரசுப் பேருந்து ஒன்று நேற்று இரவு 9.30 மணிக்கு கோயம்புத்தூரிலிருந்து கிளம்பியது. மதுரைக்குச் செல்வதற்காக மதுரையைச் சேர்ந்த முருகன் என்பவர் அந்தப் பேருந்தில் பயணம் செய்தார்.

 
இந்நிலையில், இரவு 12 மணி அளவில், பேருந்து ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள அம்பிளிக்கை என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தது. அப்போது மாரடைப்பு ஏற்பட்டு முருகன் மரணமடைந்துள்ளார். இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் பேருந்தை ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்துக்கு ஓட்டிக்கொண்டு வந்துள்ளனர். அங்கு வந்து ஒருமணி நேரம் காத்திருந்தனர். பிறகு, அரசு மருத்துவமனைக்குப் பேருந்தை ஓட்டிச்சென்றுள்ளனர். அங்கு பணியில் இருந்தவர்கள் போலீஸில் சொல்லுங்கள் எனத் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு அங்கிருந்து போலீஸ் ஸ்டேஷன் போய், தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

சம்பவம் நடந்த இடம் அம்பிளிக்கை என்பதால், அந்த ஸ்டேஷனில் இருந்துதான் ஆட்கள் வரவேண்டும் என ஒட்டன்சத்திரம் போலீஸார் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, அம்பிக்கை போலீசார் வரும் வரையில் 35 பயணிகளுடனும், இறந்துப்போன முருகனின் உடலுடன் பேருந்து காத்திருந்தது. ஒருவழியாக அம்பிக்கை போலீஸார் வந்த பிறகு, பிரேதத்தைக் கைப்பற்றி, ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக சேர்த்தனர். சுமார் மூன்று மணி நேரமாக இறந்த உடலுடன் சுற்றிய பேருந்து, அதிகாலை 3 மணிக்கு ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை கிளம்பிச் சென்றது. இறந்துப்போன முருகனுக்குத் தெரிந்தவர் ஒருவரும் அந்தப் பேருந்தில் பயணம் செய்ததால், முருகன் வீட்டாருக்கும் உடனே தகவல் கொடுக்கப்பட்டு, அவர்கள் ஒட்டன்சத்திரம் கிளம்பி வந்தனர். பிணத்துடன் அரசு பஸ் மூன்று மணி நேரம் சுற்றியது அந்தப் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
courtesy;Vikadan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval