Wednesday, March 5, 2014

இந்திய நாணயங்களை பற்றிய அரிய உண்மைகள்!!!

சென்னை: 2005ஆம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட அனைத்து ரூபாய் நோட்டுககளும் திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ பாங்க் ஆஃப் இந்தியா உத்தரவிட்டுள்ள நிலையில் இந்தியவின் ரூபாய் தாள்கள் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்களை பிஸினஸ் ஸ்டாண்டர்ட் நாளிதழ் பட்டியலிடுகிறது.
 

முதன்முதலில் இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் எப்போது வெளியிடப்பட்டன? 

காகிததினாலான நாணயம் 18ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்டது. முதலில் பாங்க் ஆஃப் பெங்கால், பாங்க் ஆஃப் பம்பாய், மற்றும் பாங்க் ஆஃப் மெட்ராஸ் ஆகிய தனியார் வங்கிகள் காகிதத்தினாலான பணத்தை அச்சிட்டன. 

1861ஆம் ஆண்டு காகித நாணய சட்டத்திற்கு பின் இந்திய அரசிற்கு (ஆங்கிலேய அரசு) காகித பணம் அச்சிடுவதற்கு ஏக போக உரிமை வழங்கப்பட்ட பின்னர் இது நடைமுறைப்படுத்தப்பட்டது. 1935-ல் ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா நிறுவப்பட்டது, அதற்கு முன்பு வரை காகித பணம் அச்சிடும் உரிமையை இந்திய அரசாங்கம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

10,000 ரூபாய் தாள்கள்

10,000 ரூபாய் பிரிவில் காகித பணத்தினை இந்திய அரசாங்கம் 1938-ல் அச்சிட்டு கொண்டிருந்தது குறிப்பிடதக்கது.

ஆறாம் ஜார்ஜ் மன்னர்

1938 -ல் ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியாவினால் அச்சிடப்பட்ட முதல் காகித பணம் ரூ5 ரூபாய் நோட்டு ஆகும். அது ஆறாம் ஜார்ஜ் மன்னரின் உருவதினை கொண்டிருந்தது. அதே ஆண்டில் ரூ10 ரூ100 ரூ1000 ஆகிய ரூபாய் நோட்டுககளும் வெளியிடப்பட்டன.

5000 ரூபாய் தாள்!! 

1946ஆம் ஆண்டு கணக்கில் வராத பணத்தினை ஒழிப்பதற்காக ரூ 1000 மற்றும் ரூ10000 ஆகியவை செல்லாததாக அறிவிக்கப்பட்டன. இவை மீண்டும் 1954-ல் நடைமுறைக்கு வந்தது. இந்த முறை (ரூ5000 ரூபாய் தாளும் அச்சிடப்பட்டது) இவை 1978-ல் மீண்டும் திரும்பி பெறப்பட்டது.

ஆர்பிஐ 

ஆர்பிஐ விரும்பிய பிரிவில் காகித பணம் வெளியிட முடியுமா? தற்பொழுது ரூ10,ரூ100,ரூ500,ரூ1000 ஆகியவை மட்டுமே அச்சிடப்படுகின்றன. ரூ1, ரூ2, ரூ5 ஆகியவை உலோகத்தினாலான காசுகளாக்கப்பட்டதால், அவை ரூபாய் நோட்டுக்ளாக அச்சிடுவது நிறுத்தப்பட்டது.


மீண்டும் ரூ10,000 அச்சிட முடியுமா 

எனினும், ரூ10,000 வரையினாலான பிரிவில், பணத்தினை அச்சிடும் அதிகாரம் ஆர்பிஐக்கு உண்டு. உயர்ந்த மதிப்பு கொண்ட பிரிவில் பணத்தை அச்சிடுவதற்கு,1934- ல் ஏற்படுத்தப்பட்ட ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்திய சட்டத்தில் திருத்தம் தேவைப்படுகிறது.


ஆர்பிஐ தான் முடிவு செய்யும்.. 

எத்தனை நோட்டுகள் அச்சிட வேண்டும் என்று ஆர்பிஐ முடிவு செய்கிறது. பணவீக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அழுக்கடைந்த நோட்டுகளை திரும்ப பெறுதல் ஆகிய காரணிகளின் அடிப்படையில், எத்தனை நோட்டுகள் அச்சிட வேண்டும் என்று ஆர்பிஐ முடிவு செய்யும்.
Currency HistoryRupee coin 5 Rupee coinIndian currency
India currencyindian rupee currency 501000 Indian Rupees — Fotopedia


ஒரு ரூபாய் நோட்டு 

காசுக்கள் அடிக்கும் பொறுப்பு ஆர்பிஐயை சார்ந்ததல்ல. அது இந்திய அரசை சார்ந்தது, எனவே தான் ஒரு ரூபாய் நோட்டுகளில் இந்திய நிதி துறை செயலாளரின் கையொப்பம் காணப்படுகிறது. 1940இல் போர் கால நடவடிக்கையாக ஒரு ரூபாய் நோட்டு மறு அறிமுகம் செய்யப்பட்டது. பிறகு ஒரு ரூபாய் நோட்டு இந்திய அரசால் நாணய அந்தஸ்தை அடைந்து வெளியிடப்பட்டது. 1994 -ஆம் ஆண்டு வரை இந்திய அரசு ஒரு ரூபாய்நோட்டுகளை வெளியிட்டது

ரூ1, 50 பைசா நாணயங்கள் 

எந்த ஒரு தொகைக்காகவும் ஒரு ரூபாய் (ரூ 1 மற்றும் மேலே) நாணயத்தினை கொடுக்கவும்/பெறவும் பயன்படுத்த முடியும். ஆனால் ரூ 10 ரூபாய்க்கு மேற்பட்ட எந்த ஒரு தொகைக்காகவும் 50 பைசா நாணயத்தினைகொடுக்கவும்/பெறவும் பயன்படுத்த முடியாது, அதனால் 50 புழக்கம் குறைந்தது. மேலும் ரூ1000 வரை நாணயத்தினை அச்சடிக்க முடியும், 1000ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளது.


Thank you : http://tamil.goodreturns.in
தகவல் ;N.K.M.புரோஜ்கான் 
அதிரை 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval