Wednesday, March 5, 2014

அருகம்புல்லின் பயன்கள்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம். அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள்


நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம். 
இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். 
வயிற்றுப் புண் குணமாகும்
இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும். 
நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். 
சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும். 
நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும். 
மலச்சிக்கல் நீங்கும். 
புற்று நோய்க்கு நல்ல மருந்து. 
உடல் இளைக்க உதவும் 
இரவில் நல்ல தூக்கம் வரும். 
பல், ஈறு கோளாறுகள் நீங்கும். 
மூட்டு வலி நீங்கும். 
கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். 
நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும். 

DSC05211


அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது. 

அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம். கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம். 

அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.

Thank you : http://eluthu.com
தகவல் ;N.K.M.புரோஜ்கான் 
அதிரை 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval