Thursday, April 10, 2014

இந்த 12 ஆவணங்களில் ஒன்று இருந்தாலும் நீங்க ஓட்டு போடலாம்!

cards nor ration cards nor any other identity proofs i
வாக்காளர் அடையாள அட்டை இல்லாவர்கள் நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் பூத் சிலிப் உள்பட 12 ஆவணங்ளை காட்டி ஓட்டு போடலாம் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் வாக்கு பதிவிற்காக அனைத்து ஊழியர்களையும் தேர்தல் ஆணையம் தயார் படுத்தி வருகிறது. வாக்கு பதிவின் போது வாக்காளர்கள் புகைப்பட அடையாள அட்டை, பூத் சீலிப் ஆகியவற்றை மட்டுமே காட்டி ஓட்டு போட முடியும் என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

இந்நிலையில் தற்போது வாக்களிக்க 12 ஆவணங்களை காட்டி ஓட்டு போடலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அவற்றின் விபரம் வருமாறு:

1. பாஸ்போர்ட்

2. டிரைவிங் லைசென்ஸ்

3. மத்திய, மாநில அரசு ஊழியர்கள் அடையாள அட்டை

4. போட்டோவுடன் கூடிய வங்கி பாஸ் புத்தகம்

5. பான் கார்டு 6. ஆதார் அட்டை

7. போட்டோவுடன் கூடிய ஸ்மார்ட் கார்ட்

8. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்ட அட்டை

9. போட்டோவுடன் கூடிய மருத்துவ காப்பீடு அட்டை

10. ஓய்வூதிய புத்தகம்

11. பூத் சிலிப்

12. புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை

மேற்கண்ட 12 ஆவணங்களை காட்டி வாக்குபதிவன்று வாக்காளர்கள் ஓட்டு போடலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Thank you : http://tamil.oneindia.in
பதிப்புரை .N.K.M புரோஜ்கான்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval