Wednesday, April 16, 2014

சகோதரிகளே நீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா?

... face best cute girl face best hd desktop wallpaper cute girl cute girlஅனைவருக்கு பிடித்த ஒன்றான நெல்லிக்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன என்பது அனைவருக்கும் தெரியும். 

ஆனால் நெல்லிக்காயில் கிடைக்கும் அழகு நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

மென்மையான மற்றும் இளமையான தோற்றத்தைக் கொடுப்பது கொலாஜன் செல்கள் தான்.

ஆனால் வயதாக வயதாக அந்த செல்களின் உற்பத்தி குறைவதால் தான், முதுமைத் தோற்றத்தை அனைவரும் பெறுகிறோம்.

ஆனால் இந்த கொலாஜன் செல்களின் உற்பத்தியை அதிகரிக்கும் திறன் நெல்லிக்காய்க்கு உள்ளது.
முதுமையை தடுக்கும்

நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் சேர்த்து குடித்து வந்தால், சருமத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, கொலாஜன் உற்பத்தி அதிகரித்து, சரும சுருக்கம் நீங்கி, இளமையுடன் காட்சியளிக்கும்.
குறிப்பாக மிருதுவான, பொலிவுடன் கூடிய சருமத்தை பெறலாம்.

கருமை திட்டுக்கள்

ஒருசிலருக்கு சருமத்தில் ஆங்காங்கு கருமையான திட்டுக்கள் காணப்படும். இது வயதான தோற்றத்தைத் தரும். ஆகவே தினமும் நெல்லிக்காய் சாறு பருகி வந்தால், அந்த திட்டுக்கள் மறைந்து, சருமம் பொலிவோடு அழகாக காணப்படும்.

அழகான உடல் வடிவம்

அழகைக் கெடுக்கும் வகையில் உடல் எடை அதிகமாக உள்ளதா? அப்படியானால் தினமும் உடற்பயிற்சி செய்வதுடன், நெல்லிக்காய் சாற்றினையும் பருகி வர வேண்டும்.
இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடல் எடை குறையும்.

ஆரோக்கியமான கூந்தல்

நாள்தோறும் ஒரு டம்ளர் நெல்லிக்காய் சாற்றினை பருகி வந்தால், அது உடலுக்கு மட்டுமின்றி, கூந்தலுக்கும் நல்லது.
அதிலும் அதில் உள்ள வைட்டமின் சி சத்தினால், முடியின் வலிமை அதிகரித்து, முடி வெடிப்பு, பொலிவிழந்த காணப்படும் கூந்தல் போன்றவற்றை தடுத்து நிறுத்தி, நல்ல ஆரோக்கியமான கூந்தலைப் பெறலாம்.

மேலும் நரைமுடி, பொடுகு போன்ற தொல்லைகளுக்கும் சிறந்த நிவாரணத்தை பெறலாம்.

Thank you : http://eluthu.com/
பதிப்புரை .N.K.M புரோஜ்கான்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval