Saturday, April 19, 2014

நம்மை நாம் எப்படி சிந்திப்போம்

People Thinkingநம்மை நாம் எப்படி சந்திப்போம்! ஒரு சின்ன கலக்கல் !!! இது என்னை பற்றி 
என் பலம் : எது என்றாலும் அது பற்றிய தெளிவுடன் இருப்பது என்ற எண்ணம்.
இதுதான் என் குணாதிசயம்

1. உற்சாகமாக இருப்பது
2. என் கருத்தை ஒப்புக்கொள்ளும்படி பேசுவது, உடன் பேசுபவரை உடனே உற்சாகம் கொள்ள வைப்பது.
3. வாக்குறுதி கொடுப்பதை விரும்பாதது
4. எதிலும் மாட்டிக் கொள்ள விரும்பாதது.
5. எதிர்காலத்தை திட்டமிடுவது, அதை அடைய முயற்சிப்பது, புதிய வாய்ப்பு வர வர, என்னையும் என் திட்டத்தையும் மாற்றிவிடுவது.
6. நட்பை நீண்ட நாள் தொடருவது.
7. பலவழிகளில் தகவல்களை சேகரித்து, புதியதாய் ஒன்றைஉருவாக்குவது.
8. அதிகாரத்திற்கு கட்டுப்படாதது, அதிகார வர்க்கத்துடன் நல்லுறவை மேற்கொள்வது.
9. யாரிடமும் அன்யோனியமாய் இருக்காதது, என் அந்தரங்கத்தை பகிர்ந்து கொள்ளாதது.

10. தன்னை ஒத்த நபர்களை தேடி பழகுவது.

11. கட்டாயப்படுத்தினால் கஷ்டமான வேலையை எளிதாக முடிப்பது.

அப்படியென்றால் எனக்கான ஆலோசனை:

1. யோகா, தியானம் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும்.

2. வரும் வாய்ப்பை எல்லாம் பயன்படுத்த கூடாது. தேர்ந்தெடுத்து முழு ஆர்வமுடன் செயல்படுதல்.

3. மற்றவர்களுக்கு எரிச்சல் ஏற்படும் வண்ணம் நடந்து கொள்ளக் கூடாது. குறை சொன்னால் கோபப்படாமல் அதில் எந்த அளவு உண்மை உள்ளது என தெரிந்து திருத்திக் கொள்ள வேண்டும்.

4. எல்லோரிடமும் எதிர்மறை எண்ணங்கள் உண்டு, அதை ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள். கருத்து வேறுபாடு, இயல்பானது என நினைத்துக் கொள்ளுங்கள்.

5. எல்லாவற்றையும் நீங்கள் செய்ய வேண்டும், நீங்கள் செய்தால்தான் சரியாக இருக்கும் என்ற நினைப்பை விட்டு விடுங்கள். மற்றவர்களையும் உங்களுக்கு உதவிடச் செய்யுங்கள்.

6. நீங்கள் சரியில்லை என்று சொல்வது போல, சரியானதை பாராட்ட கற்றுக் கொள்ளுங்கள்.

7. பிரச்சனைகளைக் கண்டு ஓடி ஒளியாதீர் கள். பேசுங்கள், நேரடியாக எதிர் கொள்ளுங்கள்.

8. உங்கள் கஷ்டத்தை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

9. எது உடனடி பலன் தரும் என்று எண்ணாதீர்கள். நீண்டகால பலனை நினையுங்கள்.

10. எடுத்துக் கொண்ட வேலையை தடை களைத் தாண்டி, பொறுமையுடன், முழு ஈடுபாட்டுடன் செய்து முடியுங்கள்.

11. புதிய வாய்பை பற்றி சிந்தனை செய்யும் பொழுது, நன்மை தீமைகளை ஆராயுங்கள்.

12. உங்கள் யோசனை அத்தனையும் சொல்ல வேண்டியதில்லை.

13. கேலி பேசுவது, அலட்சியப்படுத்துவது, அடுத்தவரின் கருத்தை கேட்காதது, வேண்டவே வேண்டாம்.

14. எதையும் முன்கூட்டியே முடிக்க முயற்சி செய்யுங்கள்.

எனக்கு உகந்த வேலை:

1. புதிதாக சிந்திக்க வாய்ப்புள்ள பணி

2. கெடுபிடி இல்லாதது

3. பேச வாய்ப்பு உள்ளது.

4. ஆலோசனை சொல்லும் வேலை

எனக்கு உதவாத வேலை:

1. ஓரே மாதிரியான வேலை

2. கடுமையான கட்டுப்பாடு உள்ளது.

3. கச்சிதமாக கண்காணிக்க வேண்டியது

இதைத்தான் இன்றைக்கு உள்முகப் பயணம் செய்யுங்கள் என்றும் உனக்குள் உன்னைத் தேடு என்றும், தன்னைத் தான் அறியும் விஞ்ஞானம் என்றும் பல்வேறு பரிணாமத்திலே நம்மை நோக்கி செலுத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

சிந்திப்போம்!

நம்மை நாம் சந்திப்போம்!

தன் நம்பிக்கையுடன்!

Thank you : http://eluthu.com/
பதிப்புரை .N.K.M புரோஜ்கான்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval