Tuesday, April 8, 2014

தொண்டி அருகே வேன் கவிழ்ந்து பெண் பரிதாப சாவு குழந்தைகள் உள்பட 21 பேர் படுகாயம் !!

தொண்டி அருகே வேன் கவிழ்ந்து பெண் பரிதாப சாவு குழந்தைகள் உள்பட 21 பேர் படுகாயம் !!எஸ்.பி.பட்டினம் அருகே வேன் கவிழ்ந்து பெண் பரிதாபமாக இறந்து போனார். இதில் குழந்தைகள் உள்பட 21 பேர் படுகாயமடைந்தனர்.
வேன் கவிழ்ந்தது
கேரள மாநிலம் திருவனந்த புரம் மாவட்டம் விதுரஅணை புரத்தை சேர்ந்த தங்கையன் நாடார் என்பவர் தனது குடும் பத்தினர் மற்றும் உறவினர்கள் 26 பேருடன் ஒரு வேனில் வேளாங்கன்னிக்கு சாமி கும்பிடுவதற்காக வந்தனர். இந்த வேனை அதே பகுதியை சேர்ந்த தேவராஜன் மகன் சந்தோஷ்குமார்(வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். இவர் கள் திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினம் அருகே உள்ள கலியநகரி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் அருகில் வந்து கொண்டிருந்த போது அதிகாலை 2 மணி அளவில் ஒரு வளைவில் வேன் திரும்ப முயன்ற போது எதிர்பாராதவிதமாக கட்டுப் பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்தது.
                  \
    அதிகாலை நேரம் என்ப தால் பயங்கர சத்தம் கேட்டு வேனுக்குள் தூங்கிக்கொண் டிருந்த அனைவரும் திடுக் கிட்டு எழுந்து செய்வதறியாது கத்தி கூச்சலிட்டனர். இவர்க ளது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டில் இருந் தவர்கள் ஓடி வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்க முயன் றுள்ளனர். மேலும் இது குறித்து எஸ்.பி.பட்டினம் போலீஸ் நிலையத்துக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் அளித்தனர். உடனடியாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் தலைமையிலான போலீஸ் படையினர் அங்கு விரைந்து வந்து இடிபாடுக ளில் சிக்கியவர் களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின் னர் ஜே.சி.பி. எந்திரம் வரவ ழைக்கப்பட்டு கவிந்து கிடந்த வேனை நிமிர்த்தினர்.
பெண் பலி
இந்த விபத்தில் தங்கையன் நாடார் மனைவி பேபி(60) உடல் நசுங்கி சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்து போனார். டிரைவர் சந்தோஷ் குமாருக்கு ஒரு கால் பலத்த சேதமடைந்தது. மேலும் இந்த விபத்தில் ராஜன், ஜோசப், வினு, ஜனீஸ், அகில், கியாசன், சோஷா, ஷீஜா, மகேசன், அகில சகீம், சஞ்சய், மஞ்சு, ரத்தினாகரன், லைலா, சுனில் குமார், சஞ்சீவன், தேவராஜன், சாந்தா, ஷைனி, பெய்சு, வல் சலா, சினேகராஜன் படுகாய மடைந்தனர். இவர்கள் அனை வரும் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து ராஜன் எஸ்.பி. பட்டினம் போலீசில் அளித்த புகாரின் பேரில் தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டியன், எஸ்.பி. பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வரு கின்றனர்.
courtesy;Todayindia.info

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval