தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் இருட்டானது போல்,
இந்தியாவெங்கும் இருளில் தவிக்க வேண்டுமா?
நமது சின்னம் இரட்டையிலை..
தமிழக ஆண்களுக்கு (அ தி மு க) கூன் விழுந்தது (கூழைக் கும்பிடால்) போல்,
இந்தியாவெங்கும் உள்ள ஆண்களுக்கு கூன் விழ வேண்டுமா?
நமது சின்னம் இரட்டையிலை..
காடாறு மாதம், நாடாரு மாதம் என்ற மன்னர்கள் காலத்து ஆட்ச்சியைப் போல்,
தலைமைச் செயலகத்தில் ஆறு மாதம், மலைகளில் ஆறு மாதம் (இமயமலை அல்லது கொடநாடு) ஆட்ச்சி நடக்க வேண்டுமா?
நமது சின்னம் இரட்டையிலை..
தமிழக சட்ட மன்றத்தில், எதிர்க்கட்ச்சிகளே இல்லாமலாக்கியது போல்,
இந்தியப் பாராளுமன்றத்தில், அடிமைகளின் உதவியுடன், எதிர்க்கட்சிகள் இல்லாமலாக்கப்பட வேண்டுமா?
நமது சின்னம் இரட்டையிலை..
யாரேனும் கருத்துச் சொல்லிவிட்டு, தமிழக நீதி மன்றங்களைத் தாண்டி, இந்திய நீதி மன்றங்களுக்கு அலைக்கழிக்கப் பட வேண்டுமா?
நமது சின்னம் இரட்டையிலை..
தமிழகத்தின் எல்லையைத் தாண்டி, இந்தியாவெங்கும் வழக்குகளை ஜவ்வு மிட்டாய் போல் இழுக்க வேண்டுமா?
நமது சின்னம் இரட்டையிலை..
உடன் பிறவா சகோதரிகளும், மன்னார்குடி மாஃபியாக்களும் உருவாக்கப்பட வேண்டுமா?
நமது சின்னம் இரட்டையிலை..
வீ வீ மினரல்ஸ் வைகுண்டராஜன்கள் போல் கடல் பாதுகாவலர்கள் இந்தியாவெங்கும் உருவாக்கப்பட்டு, சட்ட மன்றத்தில் விளக்கமளித்தது போல், நாடாளு மன்றத்திலும் விளக்கமளித்து, அந்த அப்பாவிகளை, கடல் பாதுகாவலர்களை,
மூடர்களின் இழிச் சொர்க்களிலிருந்து காக்கப்பட வேண்டுமா?
நமது சின்னம் இரட்டையிலை..
நூலகங்களும், பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களும், வேறு பயன் பாட்டிர்க்காக மாற்றப்பட வேண்டுமா?
நமது சின்னம் இரட்டையிலை..
தமிழக பள்ளிப் பிள்ளைகளின் கல்வியில் விளையாடியது போல்,
இந்தியாவெங்கும் பள்ளிப் பிள்ளைகளின் படிப்பில் விளையாட வேண்டுமா?
நமது சின்னம் இரட்டையிலை..
சென்னை மாநகர சாலைகள் எங்குள்ளது என்று, நாம் ஆராய்ந்து கொண்டிருப்பதைப் போல்,
இந்தியாவெங்கும் சாலைகள் எங்குள்ளது என்று ஆராயப்பட வேண்டுமா?
நமது சின்னம் இரட்டையிலை..
அம்மா என்றால் தான் அரசு என்று ஆகிவிட்டதைப் போல்,
இந்தியாவெங்கும் அம்மா என்று எழுதி, அவருடைய புகைப்படம் இருந்தால் எல்லாமும் சுபிட்ச்சமாகி விட்டது என்று சொல்லப்பட வேண்டுமா?
நமது சின்னம் இரட்டையிலை..
போலீஸ்காரர்கள் இங்கு ரௌடிகளாகி விட்டது போல்,
இந்தியாவிலுள்ள எல்லா விசாரணை அதிகாரிகளும் ரௌடிகளாக்கப் பட வேண்டுமா?
நமது சின்னம் இரட்டையிலை..
எல்லா வற்றுக்கும் மேலாக,
எல்லா கொத்தடிமைகளும் ஸாரீ அமைச்சர்களும் ஊமைகளாக்கப்பட்டு,
விதி 110 மட்டுமே பேசப்பட வேண்டுமா?
நமது சின்னம் இரட்டையிலை..
Note
யாரும் வாக்களிக்காமல் இருந்து விடாதீர்கள்.
உங்களுக்கு எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை என்ற நிலையிருந்தால்,
உங்கள் வோட்டுக்களை NOTAவில் பதியுங்கள்.
தேர்தல் நாள்: 24.04.2014
--
பூமியில் ஆணவத்தையும், குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்காக அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே. திருக்குர்ஆன் 28: 83.
நரகவாதிகளை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? தற்பெருமையும், ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும் தான். என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஹாரிஸா இப்னு வஹப்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பதிப்புரை .N.K.M புரோஜ்கான்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval