Wednesday, April 2, 2014

நீரிழிவு நோயாளிகளுக்கான... பாகற்காய் ஜூஸ்



... my stomach s growling i ve only had a shot of bitter gourd juice forநீரிழிவு உள்ளவர்கள், உணவில் பாகற்காயை சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுடன் இருக்கும் என்று சொல்வார்கள். அதிலும் அந்த பாகற்காயை வேக வைத்து சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை ஜூஸ் போன்று செய்து தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைக்கலாம். 

இங்கு நீரிழிவு நோயாளிகளுக்கான பாகற்காய் ஜூஸை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
                                                         
         Bitter Gourd Juice is also known as bitter melon juice. Sometimes ...  Bitter Melon Juice Health Benefits
பாகற்காய் - 2 எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன் தேன் - 1 டீஸ்பூன் மிளகு தூள் - 1 சிட்டிகை உப்பு - தேவையான அளவு ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு செய்முறை: முதலில் பாகற்காயின் தோலை சீவி, பின் அதனை கழுவி, துண்டுகளாக்கி, விதைகளை நீக்கி விட வேண்டும். பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, தேன், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு பாத்திரத்தில்
ஊற்றி, உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து, ஐஸ் கட்டிகளைப் போட்டு குடிக்க வேண்டும்.

இப்போது நீரிழிவு நோயாளிகள் குடிப்பதற்கு ஏற்ற பாகற்காய் ஜூஸ் ரெடி!!!

Thank you : http://tamil.boldsky.com
பதிப்பு ;N.K.M.புரோஜ்கான்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval