Wednesday, April 9, 2014

தமிழக வேட்பாளர் இறுதி பட்டியல் ; 845 பேர் போட்டி; 87 சின்னம் ஒதுக்கீடு

Help us by voting for the preseason 2013 All-NL Central teamசென்னை: தமிழகத்தில் போட்டியிடும் லோக்சபா தேர்தல் வேட்பாளர் இறுதி பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட்டது; இதன்படி மனு ஏற்கப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டவர்கள் வாபஸ்பெற்றவர்கள், மாற்று வேட்பாளர்கள் தள்ளுபடி என இவர்களை கழித்து தொகுதிக்கு முக்கிய கட்சிகள் , சுயேச்சை உள்பட 845 பேர் களத்தில் உள்ளனர். இவர்களில் 789 பேர் ஆண்கள், 55 பேர் பெண்கள்; ஒரு திருநங்கை. தென்
சென்னையில் அதிகபட்சமாக 42 பேர் களத்தில் உள்ளனர்.
இந்த லோக்சபா தேர்தலில் இதுவரை இல்லாத 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. முக்கிய கட்சிகள் பெரும் கூட்டாக அமையாமல் ஆங்காங்கே பிரிந்தும், கழன்றும், கழற்றியும் விடப்பட்டதால் இந்த நிலை உருவானது. அ.தி.மு.க., தலைமையில் ஒரு அணியும், தி.மு.க., தலைமையில் ஒரு அணியும், பா.ஜ., தலைமையில் ஒரு அணியும், இடதுசாரிகள் ஒரு அணியாகவும், காங்கிரஸ் தன்னந்தனியாகவும், என ஐந்து முனை போட்டி
உருவாகியுள்ளது.


367 வேட்புமனுக்கள் தள்ளுபடி :

தமிழகத்தில் மொத்தம் 906 மனுக்கள் ஏற்கப்பட்டன; இதில் 61 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. இறதியாக, 845 பேர் களத்தில் இருப்பதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அந்தந்த கட்சி சின்னம் ஒதுக்கப்படும். மேலும் 4 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் கட்சிகளுக்கு ஒரே சின்னம் வழங்கப்படும்.
மொத்தம் 87 சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. துணை வாக்காளர் இறுதி பட்டியல் இன்னும் ஒரிரு நாளில் வெளியிடப்படும். வேட்பாளர்கள் 3 தவணையாக தேர்தல் செலவை தாக்கல் செய்யலாம். இது குறித்து அனைத்து வேட்பாளர்களுடன் நாளை ஆலோசனை நடத்தப்படும். விதி மீறல் தொடர்பாக தொலைபேசி மூலம் இதுவரை 8 ஆயிரத்து 615 புகார்கள் வந்துள்ளன.

தேர்தல் களத்தில் இறுதியாக நிற்கும் வேட்பாளர்கள் எண்ணிக்கை தொகுதிவாரியாக:

தென்சென்னை 42, மத்திய சென்னை- 20, வடசென்னை- 40, ஸ்ரீபெரும்புதூர்- 21, காஞ்சிபுரம்- 11, சிதம்பரம்- 15, சேலம்- 25 பேர், நாமக்கல்- 26 பேர் , பெரம்பலூர்- 21 , திருச்சி- 29, வேலூர்- 27 , அரக்கோணம்- 24 பேர், கிருஷ்ணகிரி- 24 , ஆரணி -19, திருவண்ணாமலை- 24 , கரூர்- 25, தஞ்சை- 12, கோவை- 25 பேர் , மதுரை- 31, தேனி- 23, விருதுநகர் 26, ராமநாதபுரம்- 31, திண்டுக்கல்- 18, தென்காசி- 18,

ஆலந்தூர் சட்டசபையில் 14 வேட்பாளர்கள் இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இந்த தொகுதியில் மொத்தம் 19 மனுக்கள் தாக்கலானது. 5 மனுக்கள் தள்ளுபடியானது. 14 பேர் இறுதிப் பட்டியலில் உள்ளனர்.

புதுச்சேரியில் 30 பேர்: புதுச்சேரி தொகுதியில் மொத்தம் 41 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதில் 11 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 30 மனுக்கள் ஏற்கப்பட்டன.

இதற்கிடையில் தமிழகத்தில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
பதிப்புரை .N.K.M புரோஜ்கான் 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval