1. அவர் முதல் பங்கு (share) வாங்கியது அவரின் 11 வயதில்.... அதுவே தான் தாமதமாக வாங்கியதாக பிற்காலத்தில் அவர் தெரிவித்தார்....
2. 14 வயதிலேயே தனது சுய சம்பாத்தியத்தில் சின்ன பண்ணை வீடு ஒன்றினை அவர் வாங்கினார்.....அப்பணம் அவர் பேப்பர் டெலிவரி செய்ததில் சம்பாதித்து, சேமித்த பணம்
3. இன்று வரை 3 படுக்கை அறை கொண்ட சாதாரண வீட்டிலேயே அவர் குடியிருந்து வருகின்றார்..அவ்வீட்டிற்கு சுற்றுச் சுவரோ அல்லது வேலியோ இல்லை
4. அவராகவே அவர் காரை எங்கும் ஓட்டிச் செல்வார்.... டிரைவர் மற்றும் பாதுகாப்புக்கென ஆட்கள் யாரும் கிடையாது
5. அவர் இதுவரை எங்கும் தனி விமானத்தில் பயணித்தது கிடையாது. .. உலகின் பெயர்பெற்ற, பெரிய விமான கம்பெனிக்கு சொந்தக்காரர் அவர்....
6. அவரின் சொந்த கம்பெனிகள் மொத்தம் 63. வருடம் ஒரு முறை மட்டுமே கம்பெனியின் தலைமை பொறுப்பாளர்க்கு ( CEO) கடிதம் எழுதுவார்.... இடைப்பட்ட எந்தவொரு மீட்டிங் மற்றும் சந்திப்புகளும் இருக்காது.... அந்த கடிதத்தில் கம்பெனியின் அடுத்த இலக்கை குறிப்பிட்டு இருப்பார்.....
7. கம்பெனி பொறுப்பாளர்க்கு இரண்டு விதிகளை மட்டும் குறிப்பிடுவார் ..... அது
(அ) பங்குதாரர்களின் பணத்தை நஷ்டமடைய செய்யக் கூடாது
(ஆ) முதலாவது விதியை மறக்க கூடாது
8.அவரைச் சுற்றி எப்போதும் ஒரு உயர்தர சமூகத்தினரின் கூட்டம் இருக்காது....அவரின் ஓய்வு நேரத்தில் அவர்க்குத் தேவையான பாப் கார்னை வீட்டில அவரே தயார் செய்து சாப்பிடுவார், டிவி பார்ப்பார்....
9. அவரிடம் எந்தவொரு செல் போனோ அல்லது மடிக் கண்ணியோ வைத்திருக்க மாட்டார்....
10. உலகின் முதல் பணக்காரரரான பில் கேட்ஸ் சில வருடங்களுக்கு முன் இவரை சந்திக்க , இருவருக்கும் பொதுவான எதுவும் இல்லையென்று எண்ணி முதலி வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே வாரன் பப்பட் டை சந்திக்க நேரம் ஒதுக்கியிருந்தார்... ஆனால் சந்தித்த பொழுது, அந்த சந்திப்பு பத்து மணி நேரங்களுக்கும் மேலாக நடைப்பெற்றது .
எளிமையின் மனிதரான வாரன் பப்பட் நமக்கு சில அறிவுரைகளைச் சொல்கின்றார்....... அவை :
1. பணம் மனிதனை படைக்கவில்லை ஆனால் பணத்தை படைப்பவனை மதிக்கின்றது
2. உங்கள் வாழ்க்கையினை எளிமையாகவும், எளிதாகவும் வாழுங்கள்
3. அடுத்தவர்கள் சொல்வதை செய்யாதீர்கள். மற்றவர்கள் சொல்வதை கேளுங்கள் ஆனால் உங்களுக்கு சரியெனப் படுவதை நீங்கள் செய்யுங்கள்
4. புகழ்பெற்ற கம்பெனியினை (brand names) பின்பற்றாதீர். உங்களுக்கு வசதியானதை வாங்கி பயன்படுத்துங்கள்......
5. பணத்தை தேவையற்ற காரியங்களை வாங்கி வீணாக்காதீர்
6. உனது வாழ்க்கை....நீயே விதிகளை தீர்மாணி, அடுத்தவரை உன் வாழ்க்கையினை தீர்மானிக்க அனுமதிக்காதே........
Thank you : http://eluthu.com/
பதிப்புரை .N.K.M புரோஜ்கான்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval