Monday, April 28, 2014

மிதிவண்டியை மதிப்போம்

Electric Bicycle"கிளிங் !! கிளங் !! எனும் ஓசை ஒலிக்க; சுமையரியா சுமக்கும் சுமைதாங்கியாய் ; அவசர சமயத்தில் வேகமாக மிதித்தாலும் நம்மை வியர்வைத் துளியோடு விட்டு விட்டவன் . இவன் ஒரு காலத்தில் குடும்ப அட்டையில் பதியாத உறுப்பினர். இன்று கிளிங் ! கிளிங் ! ஓசை எங்கே ? தொலைந்தானோ ? சோம்பேரிதனத்தால் மறைந்தனோ ? நாம் தொலைத்து மறந்த உறுப்பினரின் பெயர் 'மிதி வண்டி' " 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பாதியில் ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தானியங்கிப் போக்குவரத்தின் விதை மிதி வண்டியாகும். முதலில் மிதி வண்டியின் உருவம் மரத்தால் உருவாக்கப்பட்டது , இரு சக்கரங்களும் பெரிதாக இருக்கும், இதில் பெரும் வியப்பு என்னவென்றால் இதற்க்கு மிதிக்கட்டை கிடையாது. ஓட்டுபவர் தனது கால்களால் தள்ளிக்கொண்டு தான் நகர்த்துவார் ,
அதுவும் விசைக்கேற்ப தூரத்தைக் கடக்கும் , இந்த இடைவெளியில் இருக்கையில் ஏறி அமர்ந்து கொள்வார், வண்டி நிற்கும் தருவாயில் மீண்டும் தள்ளித் தொடர்வார்.இந்த வண்டியின் பெயர் விசை மிதிப்பு(velocipede ) என கூறுவர், இதன் இடை 22 அயிர்சீரெடையகும் . மாற்றம் ஒன்றே மாறாதது என்பதைப் போல நாளிடைவில் பல வடிவங்களாக மாறியது மிதிவண்டி.

நமது ஊரில் மிதிவண்டி ஒரு காலக்கட்டத்தில் முக்கியம் வாய்த்த போக்குவரத்து ஊர்தியாகத் திகழ்ந்தது. 21 ஆம் நூற்றாண்டின் பிறப்பிற்குப் பின் எல்லோரிடத்தில இரு சக்கர வாகனம் முக்கியம் பெற்றது . 1990 -களில் வாடகைச் சைக்கிள் பிரசித்தம் சிறுவர்களிடையே, பல விதமான மிதிவண்டிக்கள். விடுமுறை நாட்களில் பெரும் பொழுதுபோக்கு வாடகைச் சைக்களில் ஊர் சுற்றுவது தான்! இப்பொழுது இது
அரிதோ அரிது. முப்பது ஆண்டுகள் முன்னர் மிதிவண்டிகள் அதிகம், இன்று இரு சக்கர வாகனங்கள் எண்ணிலடங்காமல் இருக்கிறது .பெரிதும் மிதிவண்டியைப் பயன்படுத்துபவர்கள் பள்ளி மாணவர்கள் , இவர்களும் சர்ர்ர் என இரு சக்கர வாகனத்தில் பறப்பதைப் பார்க்கிறோம். கல்லூரி மாணவர்களும் மிதிவண்டியைப் புறக்கணிப்பார்கள் , சிறகடிக்கும் வயதில் மிதி வேண்டுமா என நம்மை யோசிக்க வைப்பார்.

புத்தாண்டு பிறந்ததும் மக்களின் முதல் பிரகடனம் உடலைக் கட்டு மஸ்தாக மாற்றுவது, பருமனாக இருப்பவர் எடையைக் குறைப்பது என உறுதி செய்வார் , உடற்பயிற்சிக் கூடத்தில் சேருவர்.அங்கே செல்வதற்கும் வாகனம் தான் , உள்ளே பார்த்தால் மிதிவண்டியை வியர்வை வர மிதிப்பர்; இது வேடிக்கைத் தான் இது மட்டும் அல்ல உடற்பயிற்சி மையதிருக்குக் கூட சில நாட்களே செல்வர் , நேரத்தின் மேல்
பழியைப் போட்டு தன்னை நியாப் படுத்தி கொள்வார்கள்.
மிதிவண்டியின் பயனை நாம் உணர வேண்டும் , மக்கள் கடைத் தெருவிற்குச் செல்வதற்குக் கூட இருச் சக்கர வாகனத்தை உபயோகிப்பர், இதற்க்கு சோம்பல் முக்கிய இடம் வகிக்கிறது . கல்லெண்ணை நூறு ரூபாய் ஆக உயர்ந்தாலும் கவலைப்பட மாட்டார் , இதை மீறி குரல் எழுப்பினால் " இது மோட்டார் வாழ்கை சார் " என்பார்கள்.

வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பதைப் போல் 'வீட்டிற்கு ஒரு மிதி வண்டி அவசியம்' - என்று உறுதி எடுக்க வேண்டும். இன்றைய வேளையில் பையில் இருக்கும் பணம் எரிபொருளால் ஓடும் வாகனத்தை விட மிக வேகமாக ஓட்டம் பிடிகிறது. நாம் இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப இரு சக்கர வாகனத்தைப் பயன்படுத்தினால் சிறப்பு. அன்றாடம் மிதிவண்டி பயன்டுத்தினால் பல நன்மைகளை அறுவடைச் செய்யலாம்.
நம் தேகத்திற்கு நல்லது ; தசை வலிமை மிகும்; கெட்ட கொழுபுக்கள் குறையும்; இருதய நோயைத் தவிர்க்கலாம்; மன அழுத்தத்தைத் தவிர்க்கலாம்; நீரிழிவு நோயைத் தவிர்க்கலாம். தினமும் ஒரு மணி நேரம் மிதி வண்டி ஓடினால் 300 (cal ) எரிசக்தியை எரிக்கலாம் , மிதி வண்டியை பழுது பார்க்கும் தொழிலாளிக்கு வருமானம் ஈட்டிதரலாம்; மாசற்றச் சுழலை உருவாக்கலாம் இதற்க்கு தான் ஆசைப்பட்டார்
மதிப்பிற்குரிய கலாம் ஐய்யா , அவர் கனவை மெய்பபடுதலாம்.

மிதிவண்டியை மதி வண்டியாக மாற்றுவது நம்மிடத்தில் தான், இன்றே அக்கம் பக்கம் செல்ல பயன்படுத்துவோம் மிதிவண்டியை !! ஓசோன் ஓட்டையை பெரிதாகப் பார்க்க விரும்பாத மனிதராகலாம் !
சுற்றுச் சுழல் நண்பனே ! என வானம் உங்களை வாழ்த்தும் .....


தெரிந்துகொள்வோம் : "சைக்கிளுக்குத் தமிழில் என்ன அர்த்தம் தெரியுமா ? " துவிச் சக்கர வண்டி" , துவி என்றால் இரண்டு என்று பொருள், பின்னர் மிதிக்கட்டை அமைக்கப்பட்டதால் , மிதி வண்டி என்றானது".
பதிப்புரை .N.K.M புரோஜ்கான்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval