ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு ” .இந்த விதி எல்லாவற்றுக்கும் பொருந்தும் . இயற்கை மட்டும் விதிவிலக்கா என்ன ? இன்றைய இயந்திரச் சூழலில் நமக்கும் இயற்கைக்குமான உறவைப்பற்றி சிந்திக்க நேரமின்றி சதா ஓடிக்கொண்டே இருக்கிறோம் . இயற்கை இல்லாமல் ஒரு நிமிடம் கூட நம்மால் வாழ முடியாது . இதை உணர மறக்கிறோம் . எல்லாவற்றுக்கும் ஒரு விதமான கவர்ச்சி தேவைப்படுகிறது . நம்மை தாங்கிக் கொண்டிருக்கும் பூமியைப்பற்றிச் சிந்திக்கக்கூட நமக்கு ” உலக பூமி தினம் ” என்று ஒரு நாள் தேவைப்படுகிறது . பூமியின் முதல் எதிரி யார் ? சந்தேகமே இல்லாமல் மனிதன் தான் . இன்று பூமி இந்த அளவிற்கு பாதிக்கப்பட்டு இருப்பதற்கு நாமும் , நம் வாழ்க்கை முறையும்தான் காரணம் .
ற்கையின் தன்மைக்கு ஏற்ப புதிய கண்டுபிடிப்புகள் அமைவதில்லை . நமது பயன்பாடும் , வர்த்தகமும் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகின்றன . விளைவு , பூமியே ஒரு பெரிய குப்பைத்தொட்டி ஆனதுதான் மிச்சம் .
இன்று நாம் பயன்படுத்தும் பொருள்களில் எத்தனை மண்ணில் மட்கக்கூடியவை . மிகவும் குறைவு . பயன்படுத்தியபின் தூக்கி எறி ( Use and Through ) கலாச்சாரம்தான் இன்றைய உலகை இயக்குகிறது , இந்தக் கலாச்சாரம் பொருள்களுக்கு மட்டுமல்ல மனிதனுக்கும் தான் . ஒரு மனிதனை எவ்வளவு தூரம் பயன்படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் பயன்படுத்தி விட்டு தூக்கி எறிந்து சூழல்தான் இன்று உள்ளது . நிலம் , நீர் , காற்று என்று பாகுபாடில்லாமல் அனைத்தும் மாசடைந்துள்ளது . நம் மீது நாமே குப்பைகளை அள்ளிப்போட்டுக்கொண்டு குப்பைகளுடனே வாழ்கிறோம் . நம் வீட்டில் இருப்பது மட்டும் நம் குப்பையல்ல , பூமியில் எங்கு குப்பை இருந்தாலும் அது நம் குப்பைதான் , அதற்கு நாம் மட்டுமே காரணம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம்!.
courtesy;todayindia.info
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval