Wednesday, April 23, 2014

லண்டனிலிருந்து அஹமது பாஸ்னியாவின் மலரும் நினைவுகள்

 Ahmed Basniya
அஸ்லாமு அலைக்கும்

அதிராம்பட்டிணம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் ஹாஜி முஹமத் அவர்கள் கடந்த 32 ஆண்டுகள் சிறப்பான முறையில்
(பணியில் எப்போழும் நேர்மை) ஆசிரியர் பணியாற்றி இன்றுடன் விடைபெறுகிறார்.

நமது ஊரில் கல்வியின் அவசியத்தை அல்லாஹ் அவர்கள் மூலம் கொடுத்தது மற்றுமின்றி, 32 ஆண்டு காலம் நமதூர் இளைஞர்களின் கல்விக்கு உறுதுணையாக இருந்தவர்.

ஹாஜி சார் என்ற உடன் அதிரை இளைஞர்களுக்கு இன்றும் என்றும் நினைவில் வருவது நேரத்தை சரியாக பின்பற்றுவது அதை அவர்களிடம் கல்வி கற்ற ஒவ்வொரு மாணவர்களும் கண்டிப்பாக தெரியும்.

நான் படித்த நேரங்களில் ஹாஜி சாருடன் நடந்த சந்தோஷமான(நகைச்சுவையான) நிகழ்வுகள் அதிகம் உண்டு அதை இன்றும் எனது நண்பர்களுடன் பகிந்துக்கொள்வேன். அதை இப்பொழுது பகிந்துகொள்ள ஆசைபடுகிறேன்.

ஹாஜி சாரை பொறுத்தவரை அவர்களின் வகுப்பில் சுமார் ஐம்பதிற்கு மேற்பட்ட மாணவர்கள் இருப்பார்கள் இதில் அவர்களுக்கு நன்கு பிடித்த,தெரிந்த மாணவர்கள் இரண்டு வகை மட்டுமே

ஒன்று மிகவும் நன்றாக படிக்கும் மாணவர்கள் (வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண் எடுப்பவர்கள்)

மற்றொன்று சுத்தமாக படிக்காத மாணவர்கள் ( மக்கு பசங்க )

ஹாஜி சார் அவர்களுக்கு ஓர் பழக்கம் உண்டு

நன்கு படிக்கும் மாணவர்களை பெயர் சொல்லி கூப்பிடுவது.

படிப்பில் கவனம் செலுத்தாமல் விளையாட்டுதனம் செய்யும் மாணவர்களை �கோளறு என்று சேர்த்து பெயர் சொல்லி கூப்பிடுவது(செல்லமாக)

நான் பள்ளிக்கு பெரும்பாலும் சரியான நேரத்திற்கு வருவதில்லை அப்படி சரியான நேரத்திற்கு வந்தாலும் ஹாஜி சார் வகுப்பறைக்கு உள்ளே வந்த உடன் (தம்பி கோளறு பாஸ்னியா வந்துட்டான) என்று அவர்கள் பாணியில் கேட்பதை நினைத்தால் இப்போழும் சற்று நகைச்சுவையாக சந்தோஷமாக இருக்கின்றது.(நேரத்தின் அவசியத்தை இப்போழுது வேலை செய்யும்போது தான் புரிந்துகொண்டேன்).

அதைப்போல் அவர்களின் மற்றொரு பழக்கமான தினமும் ஓர் குறிப்பிட்ட பாடங்களை படித்து வரசொல்வது அதை மறுநாள் சொல்ல வேண்டும் ( சார் தேர்வு செய்யும் மாணவர்கள் மட்டும் குறிப்பாக கோளறு மாணவர்கள் )

சார் அவர்கள் கேள்வி கேட்கும் போழுது மிக முக்கியமான மூன்று காரணங்களை மாணவர்கள் கண்டிப்பாக சொல்லகூடாது

1. வரலே
2. தெரியலே
3. மறந்துட்டேன்

அப்படி கூறினால் சார் எப்படி அடிப்பார்கள் என்பதை நான் விளக்க தேவையில்லை. சார் அவர்களின் அடிக்கு பயந்து படிப்பை விட்டு ஓடிய மாணவர்களும் அதிரையில் ஏறாலம்.

அப்படி காலையில் கூறியதை மாலையில் (பள்ளி நேரம் முடிந்த பிறகு நடைபெறும் சிறப்பு வகுப்பு ) தேர்வு எழுத வேண்டும்

தேர்வு என்றால் ஒவ்வொரு மாணவர்களுக்கும் நியாபகம் வருவேண்டியது

1. தேர்வு எழுதுவதற்கான அட்டை
2. பேப்பர்
3. பேனா
போன்ற அனைத்தும் கண்டிப்பாக இருக்கவேண்டும் இதில் ஒன்று குறைந்தாலும் முடிந்தது கதை (சட்னி தான்)

இதை சார் பாணியில் ஆங்கிலத்தில் கூறவேண்டும் என்றால்

All students today evening have special class at 5.30pm so make sure everybody should have exam pad,paper, pen, pencil with you

இப்படி அனைத்து மாணவர்களும் எதிலும் முறையாக இருக்கவேண்டும் எனறு நினைப்பவர்.

அப்படிப்பட்ட ஓர் நல்ல ஆசிரியரை நாம் பிரிவது என்பது சற்று கவலை அளிக்கின்றது.

அவர்களிடம் கல்வி கற்ற நானும், அனைத்து மாணவர்களும், மாணவர்களின் அனைத்து பெற்றோர்களும் குறிப்பாக கதிர் முகைதீன் கல்வி நிறுவனப் பொறுப்பளர்களும்,அதிரை மக்களாகிய நம் அனைவரும்
ஹாஜி முகமத் சார் அவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தையும்,நீண்ட ஆயுளையும்,இம்மை மறுமை அனைத்திலும் வெற்றிப்படும் நபராக இருக்கவேண்டும் என்று எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் தூஆ செய்வோமாக.

- அஹமத் பாஸ்னியா 
லண்டன் 
5:08am Apr 23

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval