கர்நாடகா மாநிலம் தவன்கெரேவில் இருந்து பெங்களூருக்கு நேற்றிரவு ஒரு ஆம்னி பேருந்து புறப்பட்டு வந்தது. தனியாருக்கு சொந்தமான அந்த குளிர்சாதன நவீன சொகுசு பேருந்தில் 29 பயணிகள் இருந்தனர்.
இன்று அதிகாலை அந்த பேருந்து சித்ரதுர்கா அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக டீசல் டேங்கில் கசிவு ஏற்பட்டது. அந்த கசிவால் தீ பற்றிக் கொண்டது.
பேருந்து வேகமாக சென்று கொண்டிருந்ததால், பலத்த காற்றில் தீ பரவியது. மறு நிமிடம் டீசல் டேங்க் வெடித்தது. இதனால் பேருந்து முழுவதும் தீ பிடித்து கொண்டது.
பேருந்தில் தீ பிடித்தபோது, பயணிகளில் பெரும்பாலானவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். தீ பரவியதை தொடர்ந்து பயணிகள் அலறினார்கள். உடனே ஓட்டுனர் பேருந்தை நிறுத்தினார். பேருந்து
கதவை திறந்து பயணிகளை வெளியேற கூறினார்கள்.
11 பயணிகள் வெளியில் தப்பி வந்துவிட்டனர். 18 பயணிகள் பேருந்தின் உள்ளே சிக்கிக் கொண்டனர். அவர்களில் 6 பேர் பேருந்தின் உள்ளே சிக்கி தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மீதமுள்ள 12 பயணிகள் தீ பிடித்த நிலையில் மீட்கப்பட்டனர். அவர்கள் படுகாயங்களுடன் தவித்தனர்.
இதற்கிடையே சொகுசு பேருந்தில் தீ பிடித்த தகவல் அறிந்த காவல்துறையினரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் 12 பயணிகளையும் தவன்கெரேயில் உள்ள
மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்றனர். அங்கு 12 பயணிகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் ஓட்டுனரும், உதவியாளர் இருவரும் உயிர் தப்பியுள்ளனர். அவர்களிடம் காவல்துறை அதிகாரி சீனிவாச மூர்த்தி விசாரணை நடத்தினார்.
இதையடுத்து உயிரிழந்த 6 பயணிகள் பற்றி தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
courtesy;Todayindia.info
சேகரிக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval