கொழும்பு: இலங்கையில் 8 தமிழர்களை கழுத்தை அறுத்துக் கொன்ற வழக்கில், அந்நாட்டு ராணுவ அதிகாரி ஒருவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரின்போது சுமார் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இதுகுறித்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா. சபையும், உலக நாடுகளும் வலியுறுத்தி வந்தன. ஆனால், இலங்கை அரசு மறுத்து வந்தது.