தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் மிகக் கடுமையான வெப்பம் நிலவுகிறது. மிகச் சாதாரணமாக, பகல் நேரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தொட்டுவிடுகிறது வெயில். வறட்சியும் பஞ்சமும் மக்களைப் பெரிய அளவில் பாதித்துள்ளன. இந்நிலையில், சில துளி நீருக்காக ஒரு குழந்தை செய்யும் போராட்டத்தை பிரதிபலிக்கும் போட்டோ ஆன்லைனில் வைரலாகப் பரவிவருகிறது.
தாகத்தின் காரணமாக, சாலையோரம் தேங்கிக்கிடக்கும் சேற்று நீரை அருந்தும் சிறுமியின் இந்தப் புகைப்படம், உலகம் முழுக்க பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அர்ஜென்டினாவின் பொஸாடஸ் எனும் பகுதியில் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர், சாலையின் சிக்னலில் நின்று கொண்டிருக்கும்போது கண்ட இந்தக் காட்சியை உடனடியாகப் படம் எடுத்துள்ளார். அந்தப் படத்தை, யூனிசெஃப் ஊழியர் ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவேற்றி,
"மொத்த நாடும் பற்றி எரியும் நேரத்தில், தனக்கான நீரை நிலத்தில் தேடுகிறாள் இந்தச் சிறுமி" என்று பதிவிட்டார். இந்தப் பதிவும், போட்டோவும் சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவிவருகிறது. பியா குவாரனி (Mbya Guarani) எனும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் அந்தச் சிறுமி. இந்த இனத்தைச் சேர்ந்த பல குழந்தைகள், வறுமையின் காரணமாக சாலையோரங்களில் பிச்சை எடுக்கின்றனர். மண்ணின் பூர்வகுடிகளின் இந்த நிலை கண்டு அர்ஜென்டினா அரசாங்கம் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் அர்ஜென்டினா அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
courtesy;vikadan
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval