
இன்று 1.12.2017 மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை எதிரில் சுமார் 50 வயது மதிப்புள்ள பெண் ஒருவர் தனது பாதி கை அழுகி, ஈக்கள் மற்றும் புழுக்கள் மொய்த்த நிலையில் ரோடு ஓரத்தில் மழையில் நனைந்து மிகுந்த வலி வேதனையுடன் கேட்பார் அற்று கிடந்த அந்த பெண்மணியை ஹைடெக் அராய் பி லிமிட் [HI-TECH ARAI P LIMITED] மக்கள் தொடர்பு மேலாளரும் சமூக சேவகரும் ஆகிய திரு வ.சண்முக சுந்தரம் அவர்கள் பார்த்தவுடன் உடனடியாக மேல் சிகிச்சைக்காக நண்பர்கள் நேதாஜி மெடி டிரஸ்ட் ஹரி,மதுரை கைகோர்ட் வழக்குரைஞர் முத்துக்குமார் ஆகியோரை தொடர்பு கொண்டு அந்த பெண்மணியை மீட்டு அரசு ராஜாஜி மருத்தவமனையில் அனுமதித்து முதலுதவி அளிக்க உதவிகள் செய்தார். அந்த பெண்மணியை விசாரித்த போது, தனது பெயர் சரஸ்வதி என்றும். மதுரை சமயநல்லூர் சொந்த ஊர் என்றும். தந்தை பெயர் ஆனந்தன் தாய் பெயர் வசந்தா என்றும் கூறினார். செல்லூர் பைண்டிங் கம்பெனியில் வேலை பார்ப்பதாகவும் வேலை முடிந்து வரும் போது வாகனம் கையில் ஏற்றி விட்டதால் சுய நினைவு இன்றி வலி வேதனையுடன் ஒரு வாரமாக ரோட்டில் படுத்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.மேலும் என்னை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்த சண்முகசுந்தரம் அவர்களுக்கு நன்றி என்றும் கூறினார்.இவரைப் பற்றிய அடையாளம் தெரிந்தவர்கள் 9843116617, 9842177572 இந்த மொபைல் என்னிலோ அல்லது அரசு ராஜாஜி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவையோ அணுகவும். முடிந்த வரை பகிரவும்....
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval