"இன்னும் இரண்டு வருடங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. இந்தியாவின் நிதிநிலை வெகுவாக சரிந்து விட்டது. யார் என்ன சொன்னாலும் சரி. நிலைமை சீரடைய குறைந்தபட்சம் 24 மாதங்கள் பிடிக்கும். அதன்பின்னும் உத்திரவாதம் எதுவும் இல்லை*
*பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜி.எஸ்.டி. யம் இந்தியாவை வேரறுத்து விட்டது. யாருக்கும் அடுத்து என்ன நடக்கும் என்று சொல்ல முடியவில்லை., வெறும் புள்ளிவிவரமும் தருகிறார்கள்.*
*பிரதமர் நரேந்திர மோடி கை பிசைந்துக்கொண்டு இருக்கிறார். நிதியமைச்சர் அருணஜெட்லீ தன்னை விட்டால் போதும். ஓடிவிடலாம் என்று துடிக்கிறார்.*
*கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்து இருக்கிறது. கச்சா எண்ணையின் விலை சரிவின் பயனை மக்களுக்குத் தராமல் அதில் கிடைக்கும் இலாபத்தில் தான் நாடு ஓடிக்கொண்டு இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை குறைவு என்பதில் மோடியின் சாதனை எதுவும் இல்லை. அது உலகளாவிய ஒரு நிகழ்ச்சி. மூன்றாம் நிலையில் அது இந்தியாவுக்கு சாதகமான அம்சமாக இருக்கிறது.*
*அடுத்த 24 மாதங்களுக்கு இந்தியாவை இந்தியர்கள் தான் காப்பாற்றிக் கொள்ளவேண்டும். மோடி அரசு காப்பாற்றுவதற்கு எதுவுமில்லை. மோடி அரசு காப்பாற்றுகிறேன் என்று எடுக்கிற எந்த முயற்சியும் மேலும் நிலைமையை சிக்கலாகி விடும். சிக்கலை உண்டு பண்ணியவர்களே அவர்கள் தானே..*
*இனி மக்கள் தான் மக்களைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும். நிதிநிலை குறித்து கேட்பவர்களுக்கு பதில் சொல்லவே பயமாக இருக்கிறது.*
--- *பத்திரிக்கைககாரர்களிடம் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ஒய்.வி.ரெட்டி அளித்த பேட்டி*
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval