Sunday, December 17, 2017

கேள்வி கேட்ட விவசாயியின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு..! உசிலம்பட்டி நகராட்சி ஆணையர் நடவடிக்கை

உசிலம்பட்டிமதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயச் சங்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிவப்பிரகாசம், நகராட்சியின் ஏழு வார்டுகளின் கழிவுநீர், பாசனக் கண்மாயில் கலப்பதாகவும் இதனால் விவசாயம் பாதிக்கிறது என்றும், இதைத்தடுத்து  நிறுத்த பலமுறை கோரிக்கை வைத்தும் நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு எந்த பதிலும் சொல்லாமல் அதிகாரிகள் அன்று சென்றுவிட்டனர். இந்நிலையில் இன்று உசிலம்பட்டி நகராட்சி ஊழியர்கள் சமூக ஆர்வலர் சிவப்பிரகாசம் வீட்டிற்கு வந்து, நகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டதாக கூறி குடிநீர் இணைப்பை அராஜகமாக துண்டித்துவிட்டு  சென்றனர். நியாயமான கேள்வி கேட்டதால் சமூக ஆர்வலர் சிவப்பிரகாசம் வீட்டு குடிநீர் இணைப்பை துண்டித்து தங்கள் ஆத்திரத்தையும், அதிகாரத்தை காட்டியுள்ளதாகவும் இதற்கு உரிய நீதி கிடைக்க விவசாயச் சங்கத்தினர் போராடத் தயாராகி வருகிறார்கள்.
courtesy;vikadan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval