Friday, December 15, 2017

உறவாடும் உறவுகள் என்ற சொற்சேர்க்கை விரிவானது.

உறவாடும் உறவுகள்  என்ற சொற்சேர்க்கை
விரிவானது.

பறவை அதன் பறத்தலைப்
பற்றிய எந்தத் தடயங்களையும்
ஆகாயத்தில் விட்டு வைப்பதில்லை.

மீன் அதன் நீந்தலின் சுவடுகளை
நதியில் தேக்கி வைப்பதில்லை.

ஆனால் மனித ஜீவனுக்கு அது போன்ற
சுதந்திரம் இல்லை. அவன் இருந்ததற்கும்
வாழ்ந்ததற்குமான ஏராளமான
அடையாளங்களை மண்ணில் பதித்துச்
செல்ல வேண்டியிருக்கிறது. அவைதாம் உறவுகளை உருவாக்குகின்றன.

இந்த உறவுகளின் ஆகத்தொகையே
கலாச்சாரம் அல்லது பண்பாடு.

மனிதன்
தவிர்த்த பிற உயிரினங்களின் தேவை உயிரியல் சார்ந்தது. 

மனிதத்
தேவைகளோ உயிரியலை மட்டும்
சார்ந்தவையல்ல. அவன் உறவு
கொள்ளும் எல்லாவற்றையும்
சார்ந்தது. மனிதன் மனிதனோடு
கொள்ளும் உறவு, மனிதன்
இயற்கையோடு கொள்ளும் உறவு,
மனிதன் காலத்தோடு கொள்ளும்
உறவு, மனிதன் இடத்தோடு கொள்ளும்
உறவு, மனிதன் கருத்துகளோடு
கொள்ளும் உறவு, மனிதன் முந்தைய
தலைமுறையோடு கொள்ளும்
உறவு, மனிதன் கனவுகளோடு
கொள்ளும் உறவு - என்று உறவின்
நிலைகள் விரிவானவை. எண்ணற்ற
கிளைகள் கொண்டவை.

மனிதன்
கொள்ளும் உறவுபோலவே அவன் கொள்ளும் உறவின்மையையும் உறவில் நேரும் முரண்களையும்
பகைகளையும் கூட உறவின் கூறாகவே இலக்கியம் கருதுகிறது.
அப்படிக் கருதுவதனாலேயே
இலக்கியம் உருவாகிறது. கவிதை
உருவாகிறது. கலைகள்
உருவாகின்றன. இது எல்லாக்
காலத்துக்கும் பொருந்தும்
பண்பாட்டுச் செயல்பாடு. ஆனால் இந்தச்
செயல்பாடு காலத்தையொட்டியும் மனிதன் உருவாக்கும் சமூகச்
சூழலையொட்டியும்
மாற்றமடைகின்றன. 

அதற்கு
இருபத்தியோராம் நூற்றாண்டு உட்பட
எந்தக் காலமும் விலக்கல்ல. இன்றைய
கவிதை உட்பட எந்தக் கவிதையும்
விலக்கல்ல.
காலமும் சமூகமும் வாழ்நிலைகளும்
தொடர்ந்து மாற்றம் பெற்று
வருகின்றன. அதை யொட்டி
இலக்கியமும் குறிப்பாகக்
கவிதையும் மாற்றம் பெறுகின்றன.
அதில் இடம் பெறும் உறவுகளும்
மாற்றத்துக்குள்ளாகின்றன.

விலக நினைக்கும் உறவுகள் கூட உறவாட துடிக்கும்... 
உறவாடும் உறவு என்ற இணைய தளத்தில்... 

இல்லை... இல்லை... 

இதய தளத்தில்! 

வரலாற்று சுவட்டை வாழ்நாள் முழுவதும் வாழ்த்துகளால் சூழ்ந்த அன்பு பெருங்கடலில் என்றும் பாச அலைகள் அணி வகுக்கும்! 

மூன்றாண்டுகள் முக்குளித்து நல்லுறவை முத்தாய் தந்த உறவாடும் உறவே... 
நான்காமாண்டு பாதடி பதித்து நல்ல நட்பின் நவமணிகளை நானிலமெங்கும் புகழ் புலரச் செய்வாயாக.... 

உறவுகள் உள்ளன்பை கள்ளன்பை சுமந்து வரும் கயவர்களுக்கு தக்க பாடமாய்... 

படிப்பினையாய் பறைசாற்ற படைத்தவன் அருளால்... 
வெற்றி நடை போட வாழ்த்துகள்... 

உயிரில் கலந்த உறவை உணர்வில் நினைத்து போற்றும்... 

உன் உறவின் உண்மை தோழன்... 

S. S. ஷேக் ஆதம் தாவூதி. 

கடலங் குடி..

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval