Tuesday, December 12, 2017

அராஜகத்தின் உச்சம்...!!! சர்வாதியாகிறதா அலோபதி...!!!???!!!

 திருப்பூர் மாவட்டம், முத்தூரைச் சேர்ந்த தம்பதிகள் நந்தினி மற்றும் சதீஷ்குமார். இவர்களுக்கு எந்த மருத்துவத்தின் உதவியுமின்றி வீட்டில் நேற்று அதிகாலை 3.37 மணிக்கு உறவினர்கள் சூழ அவர்கள் ஒவ்வொருவரின் பிரார்த்தனையும், ஆசிகளும் சூழ அழகிய ஆண் குழந்தை மருட்டி முறையில் (தொப்புள் கொடி வெட்டப்படாமல்) சுகமாய் பிரசவமாகியிருந்தது. இந்நிலையில் குழந்தையின் தந்தை ஆரம்ப சுகாதார செவிலியரிடம் வீட்டில் குழந்தை சுகமாக பிரசவமாகியிருந்த தகவலை பகிரந்திருக்கிறார். மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் திளைத்திருந்த சமயத்தில் திருப்பூர் மாவட்ட ஆரம்ப சுகாதாரத்துறை மருத்துவர், தாசில்தார், மற்ற அலோபதி மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்டோர் சம்பந்தப்பட்ட தம்பதியர் வீட்டுக்குள் அத்துமீறி உள்நுழைந்துள்ளனர்.
இவ்வளவு கூட்டம் உள்நுழைந்ததை கண்ணுற்ற கிராமத்தாரும் நிகழ்வதென்ன என்று அறிந்து கொள்வதற்காக சம்பந்தப்ப தம்பதியர் வீட்டைச் சூழ்ந்து நிற்க, இதற்காகவே திட்டமிட்டு நாடகம் அரங்கேற்றிய அலோபதி மருத்துவர்கள் உரத்த குரலில் கிராமத்தவர் ஒவ்வொருவருக்கும் கேட்கும் வகையில் (உள்நுழைந்த ஒவ்வொருவரும்) சம்பந்தப்பட்ட தம்பதியரையும், குடும்பத்தாரையும் பேசவே விடாது மாறிமாறி மிரட்டியுள்ளனர்.
மருத்துவமனையில் குழந்தையும், தாயும் சேர்பிக்க பட வேண்டும் என்றும், கருப்பைவாயை தைக்க வேண்டும் என்றும், தடுப்பூசி போட வேண்டும் என்றும் மறுத்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டியதோடு மட்டுமின்றி பெற்றோர் அனுமதியின்றியே தொப்புள் கொடியை வெட்டிப் பறித்து வைத்துக்கொண்டனர். இவர்களின் அராஜத்தில் மிரண்ட குழந்தையின் பாட்டி மயங்கிவிழுந்துள்ளார்.
தொடர்ந்து அங்கு கூடியிருந்த மக்களுக்கு உரக்க கேட்கும் வகையில் அலோபதி மருத்துவ கும்பல் மூன்று உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
1) வீட்டில் யாரும் இனி பிரசவம் பார்த்துக்கொள்ள கூடாது.
2) தொப்புள் கொடி வெட்டியெறியப்பட்டே ஆகவேண்டும்.
3) தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொண்டே ஆக வேண்டும்
என உத்தரவு பிறப்பித்துவிட்டு சம்பந்தப்பட்ட தம்பதியரை ஆம்புலன்சில் ஏற்றி அரசாங்க மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சித்துள்ளனர். அதற்கு குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவிக்க தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
தொடர்ந்து கருப்பை வாயைத் தைக்க தம்பதியர் எதிர்ப்பு தெரிவிக்க அம்முயற்சியை கைவிட்ட மருத்துவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வற்புறுத்தியிருக்கிறார்கள். இவர்கள் மறுக்கவே தாயும் சேயும் நலமாக இருக்கின்றனர் இருந்தாலும் நீங்கள் ஒத்துக்கொள்ளும் வரை அவர்களை மருத்துவமனையை விட்டு அனுப்ப மாட்டோம் என்றும், ஒத்துக்கொள்ள மறுத்தால் சதீஷ்குமாரின் அலைபேசியை பறித்து, வீட்டுச் சிறையில் வைத்துவிட்டு தடுப்பூசி போடுவோம் என்றும் மிரட்டியிருக்கிறார்கள்.
தன் மனைவிக்கோ, பிள்ளைக்கோ மருந்து செலுத்த அனுமதிக்க மாட்டேன் என்று உறுதியோடிருந்த சதீஷ் அவர்களின் அத்தனை எதிர்ப்பையும் மீறி இன்று மதியம் வீட்டிற்கு தம் மனைவி, பிள்ளகயை அழைத்து வந்துவிட்டார்.
சதீஸ்குமார் தன் பிள்ளையின் தொப்புள் கொடியை தன்னிடம் ஒப்படைத்தே ஆகவேண்டும் என்பதில் உறுதியோடு ஒரு போராட்டத்திற்கு தயாராக இருக்கிறார்.
இப்பொழுது நம் கேள்வியெல்லாம் இது ஜனநாயக நாடா???
ஆம் எனில் தனக்கு அலோபதி மருத்துவம் வேண்டாம் என முடிவெடுக்கும் உரிமை தனி மனிதனுக்கு உண்டா இல்லையா???
வீட்டில் பிரசவங்கள் நடக்கலாம் என சட்டம் இருந்தும் மீறும் அராஜக அதிகாரிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கலாம் அல்லவா???
தடுப்பூசி போடுவதும் போடாததும் பெற்றோர் விருப்பம் என்றிருக்க அதை மீறி வற்புறுத்தி கைது நடவடிக்கை (சட்டத்திற்கு புறம்பாக - கைது பண்ண இயலாது எனத் தெரிந்தும்) என மிரட்டுவது மனித உரிமை மீறல் அல்லவா???
சமீபத்தில் பெருகிவரும் வீட்டுப் பிரசவங்கள் அலோபதியை கலங்கச் செய்கிறதா???
அழிவின் விளிம்பிற்கு செல்லும்முன் இப்படி அராஜத்தின் மூலம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள துடிக்கிறதா அலோபதி???
பத்துமாதம் கனவுகள் கண்டு பிள்ளை பெற்றவர் அந்த பூரிப்பில் திளைத்திருந்தது மாறி அடுத்த சில மணி நேரங்களில் தன் பிள்ளையின் தொப்புள் கொடி கேட்டு போராட வேண்டிய துர்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் நிலையில் சம்பந்தப்பட்டவர் மனநிலை எப்படியிருக்கும் என நம் ஒவ்வொருவருவராலும் புரிந்து கொள்ள முடிகிறதா???
இனி வீட்டில் பிரசவமாகும் ஒவ்வொரு பிள்ளைக்கும், குடும்பத்தாருக்கும் இதுதான் நிலை. இதை உணர்ந்தும் நாம் வாய் பொத்தி நிற்கப்போகிறோமா???
இது வரை அலோபதி மருத்துவத்தில் நடந்த குளறுபடிகளால் மரணமடைந்தவர்களுக்ிகாக எத்தனை நடவடக்கைகள் இது போல தீவிரமாக எடுக்கப்பட்டிருக்கின்றன???
தன் பிள்ளையின் நலன் மீதனான அக்கறை பெற்றவர்களுக்கு இருக்குமா அல்லது மருத்துவத்திற்கு இருக்குமா???
இதற்கான போராட்டத்தை சம்பந்தப்பட்ட குழத்தையின் தந்தை முன்னெடுத்தால் நம்மில் எத்தனை பேர் அவரோடு தோள் கொடுக்க தயாராயிருப்போம்???
இன்னும் இன்னும் நம் கேள்விகளையும், அதற்கான தீர்வுகளையும் தொடர்வோம். சதீஷுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்
சதீஷ்குமார்,
சக்கரபாளையம்,
முத்தூர்.
அலைபேசி : 8012348070

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval