டெல்லி: குழந்தைகளை பல மாநிலங்களில் இருந்து கடத்திவந்து டெல்லியில் பிச்சையெடுக்கும் கும்பல் கைது செய்யப்பட்டது. இதற்கு உதவியாக பேஸ்புக் பதிவு அமைந்ததுகுறிபிடத்தக்கது.
கோழிக்கோடை சேர்ந்த தீபிகா மனோஜ் டெல்லியில் வசித்து வருகிறார். சமூக நலப்பணிகளில் இவர் ஈடுபட்டு வருகிறார்.
இவர் மெட்ரோ ரயிலில் பயணிப்பது வழக்கம். தில்சந்த் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒரே இடத்தில் சிறுவன் ஒருவன் தூங்கும் பையனை மடியில் கிடத்தி வருவோர், போவோரிடம் பிச்சையெடுத்து வந்தான்.
இதனை பலமுறை பார்த்துள்ளார் தீபிகா. எப்போதும் மடியில் உள்ள சிறுவன் தூங்கிக்கொண்டிருப்பதை பார்த்த இவருக்கு சந்தேகம் எழுந்தது.
இரு குழந்தைகளையும் விடியோ எடுத்து தனது முகநூலில் பதிவு செய்திருந்தார். அப்பதிவை ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பார்த்திருந்தனர். இந்நிலையில் அப்பதிவு திடீரென்று நீக்கப்பட்டது.
அப்பதிவு குறித்து வந்த குற்றச்சாட்டின்பேரில் அதனை நீக்கியதாக பேஸ்புக் தெரிவித்தது. இதன் பின்னணி குறித்து ஆராய தொடங்கினார் தீபிகா மனோஜ்.
தில்சந்த் மெட்ரோ நிலையத்தில் இருந்து அச்சிறுவன் மாயமாகி இருந்தான். இதனால் வேறு வழியின்றி நண்பர்கள் துணையுடன் அக்குழந்தையை வேறொரு இடத்தில் பார்த்தார்.
கேரள மாநிலத்தில் இருந்து குழந்தைகளை கடத்திவந்து பிச்சை எடுக்க வைக்கும் கும்பல் குறித்த விபரம் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அக்கும்பலை வளைத்தது. அவர்களிடம் பிடிபட்ட குழந்தைகளை சிறுவர் சீர்திருத்த மையங்களில் ஒப்படைக்கப்பட்டனர்.
கடத்திவரப்படும் குழந்தைகள் பல்வேறு சித்ரவதை செய்யப்பட்டு பிச்சையெடுக்க வைக்கப்படுவது தெரியவந்தது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval