சவுதியில் 4 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை திருடிக் கொண்டு இந்தியாவிற்கு வந்துவிட்ட மலையாளி நண்பரால், இரண்டு தமிழர்கள் கண் கலங்கி நிற்கும் பரிதாப நிலைமை ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் நாகலூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், சவுதியில் உள்ள தனியார் மின்சாதன பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதேவேளையில் கேரளா மாநிலம் பூவார் பகுதியை சேர்ந்த சஞ்சு, சவுதியில் ஓட்டுனர் வேலை பார்த்து வந்துள்ளார்.
அங்கு கெடுபிடி அதிகரித்ததால் சொந்த ஊருக்கு திரும்ப சஞ்சு முடிவு செய்துள்ளார். அப்போது ராஜேந்திரன் ரூமில் இரண்டு நாட்கள் தங்குவதற்கு சஞ்சு அடைக்கலம் கேட்டுள்ளார். பிறகு இந்தியா திரும்பும் போது, ராஜேந்திரனின் 2 1/2 லட்சம் ரூபாய் மற்றும் அவரது நண்பர் விஸ்வநாதன் சேர்த்து வைத்திருந்த, ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தையும் திருடி விட்டு கேரளாவிற்கு சென்றுள்ளார்.
வேலை முடித்துவிட்டு ரூமிற்கு வந்த இருவரும் பணம் திருடிப் போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பிறகு சஞ்சுவை அலைபேசியில் தொடர்பு கொண்ட போது, 4 லட்சம் ரூபாயை தாம் தான் எடுத்து வந்ததாகவும், என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள் என பேசி போனை துண்டித்து விட்டாராம்.
இதனால் குடும்பத்தினருக்கு பணம் அனுப்ப முடியாமலும் திருடி சென்ற சஞ்சு மீது புகார் அளிக்க முடியாமலும் இருவரும் தவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval