Saturday, February 21, 2015

தெரியாத 10 உண்மைகள்: துபாய்…!!

Untitled-1 copyவளைகுடா நாடுகளான அரபு நாடுகளிலேயே ரொம்பவும் சிறப்பான, உலகப் புகழ் பெற்ற நகரம் துபாய்
உலகின் மிக வளர்ச்சியடைந்த, செழிப்பான நகரம் அப்படீங்கிறது இதுக்கு உலகெங்கும் கிடைத்திருக்கும் பெருமை.

1.தப்பே நடக்காதாம்
துபாயில் குற்றம் என்பதே ரொம்ப, ரொம்ப, ரொம்ப கம்மியாம். துபாய்ல நடக்குற குற்றத்தோட சராசரி சதவீதம் பூஜ்ஜியம் தானாம். இதனால தான் இது உலகின் ரொம்ப சேஃபான சிட்டி என்ற பெயரையும் பெற்றிருக்கு.
ஒரு திருட்டு, ஊழல், சண்டை எதுவுமே இருக்காதாம். அரேபியாவோட மத்த இதுக்கு மெயின் காரணம் என்ன தெரியுமா… சின்ன குற்றத்துக்கு கூட பெரிய தண்டனை.
இது நீங்க கேள்விப்பட்டது தான். இருந்தாலும் சொல்றேன். திருடினா கையை வெட்டுவாங்க, கொஞ்சம் பெரிய கசமுசான்னா கழுத்தையே வெட்டிடுவாங்க.
2.வருமாண வரியே கிடையாது
உலகிலேயே பணக்காரங்களோட விகிதம் துபாய்ல தான் அதிகம் அப்படின்னு சமீபத்திய ஆய்வு ஒன்னு சொல்லுது. காரணம், இங்க வருமாண வரின்னு ஒன்னு இல்லவே இல்லையாம். அதனால, துபாய்ல நீங்க எவ்வளோ சம்பாதிச்சாலும், வச்சு சாபிடலாம்.
3.உலகின் உயரமான கட்டிடங்கள் எல்லாம் இங்க தான் இருக்கு
துபாய்ல தான் உலகின் மிகப் பெரிய, உயரமான கட்டிடங்கள் இருக்கு. துபாய்ல எங்கப் பாத்தாலும், வானத்தை நோக்கி இருக்கும் பெரிய பெரிய பில்டிங்க்ஸ் தான். இதுல விஷயம் என்னன்னா, இந்த கட்டிடங்களோட எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிச்சுகிட்டே போகுதாம்.
உலகின் பெரிய ஷாப்பிங் மால், உயரமான ஹோடல், உலகின் மிகப் பெரிய அக்வாரியம் (aquarium) இது எல்லாமே துபாய்ல தான் இருக்கு. மனிதனால் உருவாக்கப்பட்ட மிதக்கும் நகரம் அப்படின்னு ஒரு இடமும் துபாய்ல இருக்கு.
இப்போதைக்கு உலகிலேயே உயரமான புர்ஜ் கலிஃபா தான். இது துபாய் சிட்டிக்கு நடுவுல இருக்கு. இந்த உயரமான கட்டிடங்களுக்காகவே, உலகச் சுற்றுலா பிரியர்கள் தவறாம துபாய் போறாங்க.
4.மின்னல் வேகத்துல வளர்ச்சியான நகரம்
உலகின் வேகமாக வளர்ச்சி அடைந்த நகரங்களில் ஒன்று துபாய். 1963ல் தான் துபாய்ல எண்ணெய் இருக்கிறது கண்டுபிடிக்கப்ப்ட்டுச்சு. தொடர்ந்து, 1968ம் வருஷம் துபாய்ல வெறும் 13 கார்தான் இருந்துச்சுன்னு சொன்னா நம்புவீங்களா…??
அனா, இப்ப வீட்டுக்கு 10 கார் வச்சிருப்பாங்க போல அவ்வளவு ஒரு அபரிமிதமான வளர்ச்சி. அது மட்டும் இல்ல, இந்த கார்களால ஏற்படும் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த டபுள் டக்கர் ரோட் வசதியை இங்க தான் ஃபர்ஸ்ட் அறிமுகப்படுத்தினாங்களாம்.
5.துபாய்ல பாதிக்கு பாதி பேர் இந்தியர்கள் தானாம்
துபாயோட மக்கள் தொகையை பார்த்து எல்லாரும் மிரண்டே போயிட்டாங்களாம். காரணம் துபாய் நகரத்துல மட்டும் வாழும் மக்கள் தொகையில் பாதிக்கு பாதி இந்தியர்கள் தானாம். வெறும் 17% பேர் தான் எமிரேட்ஸை சேர்ந்தவங்க. மீதி இருக்கும் மக்கள் வெளி நாடுகளில் இருந்து துபாய்க்கு குடியேறினவங்க.
6.பாலைவனத்தில் பனி
துபாயோட மால்கள் ரொம்ப ரொம்ப புதுமையானது, அதோட வேர்ல்ட் ஃபேமஸ். துபாய் ஒரு பாலைவனம். இந்த பாலைவனத்துக்குள்ள பனிச் சறுக்கு விளையாடும் மைதானமே அமைச்சிருக்கு ஒரு ‘தி துபாய்’ மால். உலகிலேயே மிகப் பெரிய உள் அரங்க பனிச்சருக்கு மைதானம் இது தானாம். இதோட பரப்பளவு 3,000 சதுர அடிகளாம்.
7.‘ஆடம்பரம்’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் துபாய்
உலகிலேயே மிகவும் ஆடம்பரமான 5 ஸ்டார் மற்றும் 7 ஸ்டார் ஹோட்டல்கள் துபாய்ல தான் இருக்கு. ’தி புர்ஜ் அல் அராப்’ இது தான் உலகத்தின் பயங்கர ஆடம்பரமான ஹோட்டல்.
இந்த ஹோட்டலுக்கு வரவங்க எல்லாரும் உலக பணக்காரங்க தானாம். அடுத்த ஆடம்பரம் பால்ம் ஐலாண்ட்ஸ். உலகின் மனிதனால் உருவாக்கப்பட்ட கடற்கரை தான் இந்த பால்ம் தீவுகள்.
ஜுமேரியா கடற்கரைல இருக்கும் இது சுமார் 520 கி.மீ பரந்து இருக்குதாம். இதோட இன்னொரு பெருமை இதை விண்வெளியில் இருந்தும் பார்க்க முடியுமாம்.
8.போலீஸுக்கு ரேஸ் கார்
துபாய் போலீஸுக்கு அரசாங்கம் கொடுத்திருக்கும் கார்கள் என்ன தெரியுமா… உலகத்தோட முன்னணி ரேஸ் கார்கள் தான். துபாய் போலீஸ் உபயோகிக்கும் கார்களில் சிலவும் அதோட விலையும்(அமெரிக்க டாலர்) கீழே கொடுக்கப்பட்டிருக்கு:
Ferrari FF $500,000
Lamborghini Aventador $397,000
Aston Martin One-77 $1.79 million
துபாய்ல சாதாரணமாவே எல்லாரும் பெரிய பெரிய கார் தான் வச்சு இருக்காங்க. தப்பு செய்றவங்க அப்படி பெரிய காரில் மின்னல் வேகத்துல தப்பிச்சா அவங்கள துறத்தி பிடிக்க போலீஸுக்கு இப்படிப்பட்ட கார்ஸ் அவசியம் தானே…
9.ஏழைகளுக்கு இலவசம்
துபாயில் எப்பவுமே, காசு இல்லாதவங்களுக்கும் வேலை இல்லாதவங்களுக்கும் இலவச உணவு உண்டாம். முன்னணி ஹோட்டல்கள் மற்றும் மால்களில் ஏழைகளுக்காகவே இலவச ஃப்ரிட்ஜ் இருக்குமாம்.
10.செல்லப் பிராணி
நம்ம ஊர்ல செல்லப் பிராணின்னா நாய், பூனை, இதைத் தான் வளர்ப்போம். ஆனா, துபாய் மக்கள் சிங்கம், புலி, சிறுத்தைன்னு பெரிய பெரிய பிராணிகளைத் தான் வளர்ப்பாங்களாம். சமூகத்தில் அவங்க பவரைக் காட்ட இப்படி சிங்கம் புலி வளர்த்துகிட்டு வராங்களாம் துபாய் வாசிகள்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval