Tuesday, February 3, 2015

தமிழகத்தில் மதச்சார்பின்மையுடைய அனைவரும் ஒன்று சேர வேண்டும்: தொல் திருமாவளவன் பேச்சு


தமிழகத்தில் மதச்சார்பின்மையுடைய அனைவரும் ஒன்று சேரவேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
காரைக்குடியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற கட்சியில் இஸ்லாமியர்கள் இணை யும் விழா மற்றும் ஒடுக்கப்பட்டோர் மக்கள் அரசியல் எழுச்சிவிழா பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
சாதி சங்கம் அமைத்து அரசியல் கட்சியாகியுள்ளவை குறித்து தமிழகத்தில் பெரிய பட்டியலிடலாம். அவர்கள் இரட்டை வேடக்காரர்கள். ஆனால் கட்சியாகவே தொடங்கப் பட்டதுதான் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி. இது சாதிக்கட்சியல்ல. அனைத்துச் சமூகத் தைச் சேர்ந்தவர்களும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியில் சேரலாம். இக்கட்சி சாதியை ஒழிக்கப்புறப்பட்டிருக்கிற இயக்கம். மதத்திற்கு அப்பாற்பட்ட இயக்கம்.
பொன். ராதாகிருஷ்ணனுக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் பிரச்சனை என்ன?. ஆனால் அவரது அதிகாரம் அவரை பேசவைக்கிறது. 2016 தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று பா.ஜ.க கனவு கண்டுகொண்டிருக்கிறது.
கோட்சேவுக்கு தமிழகத்தில் 52 இடத்தில் சிலைவைக்கும் என்கிறார் பொன்ராதாகிருஷ் ணன். காங்கிரஸ் கட்சி வேண்டுமானால் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும். ஆனால் விடுதலைச்சிறுத்தைகள் அதனை தடுக்கும். காந்தியை சுட்டுக்கொன்ற கொலைகாரனை தேசபக்தன் என்கிறார்கள். இந்தத்துணிச்சல் எப்படி வந்தது?. முந்தைய ஐ.மு கூட்டணி அரசு இருந்தபோது பேசமுடிந்ததா?. சிறுபாண்மையினரை கட்டாய மதமாற்றம் செய்கி றார்கள்.
மோடியும், ஒபாமாவும் சந்தித்தார்கள். அதன் பிறகு ஒபாமா என்ன சொல்லியுள்ளார்?. மதச்சார்பின்மையை கடைப்பிடித்தால்தான் இந்தியா வளர்ச்சியடையும் என்று கூறி சென்றுள்ளார். உலகில் அத்தனைமதங்களும் மதிக்கக்கூடியவை என்று சொல்லக்கூடிய அரசியல் அமைப்புச்சட்டம்தான் இந்திய அரசியல் அமைப்புச்சட்டம்.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியில் இஸ்லாமியர்கள் இணைவதை சிலரால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. தமிழில் பெயர் சூட்டுவதையும் அவர்கள் விரும்பவில்லை. இக்கட்சியில் அனைவரும் இணையலாம். அதிகாரிகளும், காக்கிச்சட்டை போட்டவர் களும் கூட இணையலாம். இது அனைவருக்குமான இயக்கம்.
இங்குள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்விப் பாடத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பாடல் ஏதோ ஒரு காரணத்தால் அதனை நீக்கவேண்டும் என்று சொல்லப்படுவதை திராவிடர் கழகம் தெரிந்து எதிர்த்துள்ளது. பாரதிதாசன் பாடல்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டவை. அப்படிப்பட்ட பாடலை நீக்க துணைவேந்த ருக்கும் அதிகாரமில்லை. முதலமைச்சருக்கும் அதிகாரமில்லை. அவ்வாறு பாடலை நீக்குவதற்கு முற்பட்டால் விடுதலைச்சிறுத்தைகளும் இணைந்து போராடுவோம் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
அமைதியாக இருக்கிற தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்கு மதவெறி பாசிசத்தை எதிர்ப்ப தற்காக மதச்சார்பின்மையைச் சேர்ந்த அனைவரும் தேர்தல் நேரம் மட்டுல்ல இஸ்லா மியர், கிறிஸ்தவர் என சிறுபாண்மையினரை காப்பாற்ற ஒன்று சேருங்கள் என்றார் திருமாவளவன்.
கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள், தி.க மாவட்டச்செயலாளர் என்னாரெசுபிராட்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாவட்டச்செயலாளர் பிஎல். ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
. நன்றி.......dinamani

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval