Saturday, February 7, 2015

அதிகரிக்கும் ஆபத்து! வாட்ஸ்-அப் குறுந்தகவல்களை பாதுகாப்பது எப்படி?

watsapp_safe_001வாட்ஸ்-அப் செயலியில் பகிரப்படும் சில முக்கிய தகவல்கள் பாதுகாக்கப்படாமல் இருந்தால் அது பெரிய ஆபத்தில் முடிய வாய்பிருக்கிறது.
அதனால் பகிர்ந்துக் கொள்ளப்படும் குறுந்தகவல்களை பாதுகாப்பது என்பது முக்கியமான ஒன்று. அவற்றை எப்படி பாதுகாப்பது என்று பார்க்கலாம்.
பாஸ்வேர்டு பாதுகாப்பு
முதலில் உங்களது வாட்ஸ்-அப் செயலியை பாஸ்வேர்டு அல்லது பின் நம்பர் கொடுத்து பாதுகாக்க வேண்டும். இது உங்கள் குறுந்தகவல்களை மற்றவர்களிடம் இருந்து பாதுகாக்கும்.
போட்டோரோல்
ஐபோனில் போட்டோரோல்களை மாற்றியமைக்க, ஐபோன் செட்டிங்ஸ்- ப்ரைவஸி- போட்டோஸ் என்ற ஆப்ஷனை தெரிவு செய்து வாட்ஸ்-அப் செயலியை டீசெலக்ட் செய்ய வேண்டும்.
ஆன்டிராய்டில் இதை மேற்கொள்ள ES File Explorer ஆப்ஷனிற்கு சென்று அனைத்து போட்டோ மற்றும் வீடியோ போல்டர்களுக்கு சென்று .nomedia என்ற பெயரில் போல்டர் ஒன்றை உருவாக்கினால் போதுமானது.
மின்னஞ்சல்
வாட்ஸ்-அப் தரப்பில் இருந்து மின்னஞ்சல்கள் வருவதற்கு சாத்தியமே இல்லை. ஒருவேளை நீங்களாக உதவி குறித்து மின்னஞ்சல் அனுப்பியிருந்தால் மட்டும் அதற்கான் பதில்கள் மின்னஞ்சல் மூலம் வரும். ஏனைய மின்னஞ்சல்களை கண்டு ஏமாற வேண்டாம்.
டீ ஆக்டிவேட்
வாட்ஸ்-அப் பயன்படுத்தும் போன் ஒருவேளை தொலைந்து விட்டால் உங்களது வாட்ஸ்-அப் செயலியை உடனடியாக டீ ஆக்டிவேட் செய்ய வேண்டும்.
லாஸ்ட் சீன்
வாட்ஸ்-அப் செயலியில் லாஸ்ட் சீன் என்ற சேவையை நிறுத்த வாட்ஸ்-அப் ப்ரோஃபைல் சென்று லாஸ்ட் சீன் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
ப்ரோபைல் படம்
வாட்ஸ்-அப் ப்ரைவஸி மெனுவில் போட்டோ ஷேரிங் ஆப்ஷன் சென்று contacts only என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்.
லாக் அவுட்
வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்தாத போது அதை லாக் அவுட் செய்த நிலையில் வைத்திருக்க வேண்டும். முக்கியமான தகவல்களை முடிந்த வரை வாட்ஸ்-அப் செயலியில் அனுப்புவதை தவிர்ப்பது நல்லது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval