சென்னை புத்தகத் திருவிழா!
மாலை நேரம்.
கூட்டம் நிரம்பி வழிகிறது.
ஐ எஃப் டி அரங்கில் அமர்ந்திருக்கின்றேன்.
ஒருவர் “சார், நான் மணிவண்னன், _____
நிறுவனத்தில் சீனியர் அதிகாரியாக இருக்கின்றேன்! ஜவாஹிருல்லாஹ் எம் எல் ஏ இங்கு எங்காவது இருப்பார்களா” என்றார்.
நிறுவனத்தில் சீனியர் அதிகாரியாக இருக்கின்றேன்! ஜவாஹிருல்லாஹ் எம் எல் ஏ இங்கு எங்காவது இருப்பார்களா” என்றார்.
எனது முகக்குறிப்பைபார்த்து விட்டு அவரே தொடர்ந்தார்: “ சார், அவர் ‘துக்ளக்’ இதழின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். இஸ்லாத்துக்கு எதிரான கருத்துக்கள் சொல்லப் பட்ட போதும் அவரது முகத்தில் அந்தப் புன்சிரிப்பு மாறவே இல்லை. அவர் விமர்சனகளை எதிர்கொண்ட விதம் பின்னர் அவர் ஆற்றிய உரை .... மத்திய பி ஜே பி அரசை அவர் விமர்சனம் செய்த பாங்கு அனைத்துமே எங்களைக் கவர்ந்து விட்டது சார்! எனக்கு இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பிடிக்காது சார். ஆனால் அந்த நிகழ்சியில் திரு ஜவாஹிருல்லாஹ் அவர்கள் நடந்து கொண்ட விதம் பலகாலமாக நான் முஸ்ம்கள் மீது கொண்டிருந்த அபிப்பராயங்கள் அனைத்தும் தவிடுபொடியாகி விட்டது!”
“உங்கள் அலைபேசி எண்ணைக் கொடுங்கள்! அவர்களை உங்களோடு பேசச் சொல்கிறேன்” என்றதும் தனது அலைபேசி எண்ணைத் தந்தார். சகோ. ஜவாஹிருல்லாஹ் அவர்களின் எண்ணைக் கேட்டு பேச முயற்சித்த போது பதில் இல்லாமல் இருந்தது.
சிறிது நேரம் கழித்து அவரே தொடர்பு கொண்டார்.
என்னை அறிமுகப் படுத்திக் கொண்டபின் திரு மணிவண்னன் அவர்கள் குறித்துச் சொல்லிவிட்டு “அவரது அலைபேசி எண் தருகிறேன்.
அவரோடு பேச முடியுமா என்றேன்” அதைவிட வேறு என்ன வேலை அண்ணா” என்றபடி தொலைபேசி எண்ணைப் பெற்றுக் கொண்டார்.
மறுநாள் காலை, திரு மணிவண்னன் என்னை அலைபேசியில் அழைத்து “ செயல் வீரர் சார் நீங்கள். சும்மா தான் எனது அலைபேசி எண்ணைக் கேட்கின்றீர்களோ என எண்ணினேன். திரு ஜவாஹிருல்லாஹ் என்னோடு பேசினார். மே மாதம் எங்கள் நிறுவனதில் நடைபெறும் விழாவுக்கு திரு ஜவாஹிருல்லாஹ் அவர்களை அழைக்கலாம் என முடிவு செய்துள்ளேன்.
அன்று “துக்ளக்” விழாவில் நாங்கள் 200 பேர்கள் அவரைச் சந்தித்து பேசக் காத்திருந்தோம். ஆனால் அவர் நிகழ்ச்சி முடிந்ததும் புறபட்டுச் சென்று விட்டார். துக்ளக் ஆசிரியர் திரு சோ அவர்களும் திரு ஜவாஹிருல்லாஹ் அவர்கள் குறித்து மிகவும் சிலாகித்தூப் பேசினார்! சார் அனறு நான் அவரைச் சந்தித்தது தெய்வ சங்கல்பம் என்றே சொல்ல வேண்டும்.
ஒரு சில மணித்துளிகளில் ஒரு தனி மனிதரின் நடத்தை ஒரு ஒட்டு மொத்த சமூகத்தின் எனது கணிப்புகளை மாற்றி விட்டது என்றால் அந்தச் சந்திப்பு தெய்வ சங்கல்பம் தானே சார்”
என் இனிய நண்பர்களே, இந்த இனிய அணுகு முறைதான் இன்றைய தேவை!
-சேயன் ஹமீது
courtesy;facebook
courtesy;facebook
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval