Tuesday, February 24, 2015

மோடி ஆட்சி பிரிட்டிஷ் ஆட்சியை விட கொடுமையானது : அண்ணா ஹசாரே குற்றச்சாட்டு!

anna-hazare-blog
விவசாய நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் ஜனநாயகத்துக்கு விரோதமானது, இந்த சட்டத்தை இயற்றியுள்ளதன் மூலம் மோடி அரசு, பிரிட்டிஷ் அரசை விட கொடூரமான அரசாக மாறிவிட்டது என்று காட்டமாக கூறியுள்ளார் அண்ணா ஹசாரே.
சுதந்திரம் பெற்ற பிறகு, விவசாயிகளுக்கு எதிரான மிகப்பெரும் அநீதி தற்போது நடக்கிறது. 2013 – ம் ஆண்டு இயற்றப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில், ஒரு கிராமத்தின் 70 சதவீத மக்கள் ஒப்புக் கொண்டால் மட்டுமே நிலம் கையகப்படுத்தப்படும். ஆனால், இப்பிரிவை தற்போது நீக்கியுள்ளனர்.
பெரு நிறுவனங்களுக்குச் சாதகமாக இப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பு, நல்ல நாள் வரும் என மக்களுக்கு உறுதியளித்தனர். அந்த நல்ல நாள் பெரு நிறுவனங்களுக்குத்தானா, சாதாரண மக்களுக்கு இல்லையா? என்றும் சரமாரியாக சாடுகிறார், அண்ணா ஹசாரே.
மோடி அரசுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடங்கியுள்ள ஹசாரே, நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராக, நாடு முழுவதும் சிறை நிரப்பும் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் மத்திய அரசை எச்சரித்துள்ளார் ஹசாரே.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval