சாம்சங் புதிய ஸ்மார்ட் டிவியின் சிறப்பம்சம்… வாய்ஸ் கன்ட்ரோல்! அதாவது, ரிமோட் கன்ட்ரோல் மட்டுமல்லாமல், நம் குரல் மூலமாகவும் நம் ஆணைகளை உள்வாங்கி, செயல்படுகிறது.
மொத்தம் 26 மொழிகளை உள்வாங்கி செயல்படுகிறது, சாம்சங் டிவியின் வாய்ஸ் கன்ட்ரோல். ரிமோட்டில் இருக்கும் வாய்ஸ் மோட் பட்டனை அழுத்தியவுடன், ஆக்டிவேட் ஆகிவிட்டது என்பதைக் குறிக்கும் விதமாக ஸ்மார்ட் டிவி ஸ்கீரினில் மைக்ரோஃபோன் சிம்பல் தெரியும். பிறகு ‘ஹெல்ப்’ என்று கூறினால், வாய்ஸ் மோட் கமெண்ட்ஸ் என்னவெல்லாம் இருக்கிறதோ, அந்த லிஸ்ட் டிஸ்பிளே ஆகும். அதற்கு ஏற்றாற் போல சேனலை மாற்றுவது, வால்யூமைக் கூட்டுவது, குறைப்பது, எஃபக்ட்ஸை கொண்டு வருவது என்று குரல் மூலமாக கண்ட்ரோல் செய்து கொள்ளலாம்.
இந்த வாய்ஸ் கண்ட்ரோலுக்கு முன்கூட்டியே டெக்ஸ்ட் இன்புட் கொடுக்க வேண்டும். அதாவது, குரல் வழியாகச் சொல்லப்போவதை முன்கூட்டியே எழுத்து மூலமாக பதிந்து, இந்தந்த கட்டளைகளுக்கு என்னென்ன செயல்பாடுகள் புரிய வேண்டும் என்பதை அதில் குறிப்பிட வேண்டும். இந்த டெக்ஸ்ட் இன்புட், அதற்குரிய சர்வரில் சேவ் ஆகியிருக்கும். ஒவ்வொரு முறை வாய்ஸ் கண்ட்ரோல் மூலமாக நாம் ஆர்டர்கள் கொடுக்கும் போதும், அந்த வார்த்தை டெக்ஸ்ட் இன்புட்டில் இருக்கிறதா, அதற்குரிய வேலை என்ன என்பதை சர்வரில் போய் சரிபார்த்து வாய்ஸ் கண்ட்ரோல் வேலை செய்யும். உதாரணமாக, வால்யூமை கூட்டுவதற்கு ‘வால்யூம் ஹை’ என்று டெக்ஸ்ட் கொடுத்து சேவ் செய்துவிட்டால், பிறகு வாய்ஸ் கண்ட்ரோலை ஆன் செய்து, ‘வால்யூம் ஹை’ என்று சொன்னால், வால்யூமைக் கூட்டும்.
இப்படி ஒவ்வொரு முறையும் நாம் கொடுக்கும் ஆர்டர்களை உள்வாங்கும் செயல்படுத்தும் ஸ்மார்ட் டிவி-யில், வாய்ஸ் கன்ட்ரோல் ‘ஆன்’ல் இருக்கும்போது, வீட்டில் பேசும் மற்ற விஷயங்களையும், வார்த்தைகளையும் உள்வாங்கி சர்வரில் பதிந்து கொண்டே வரும் என்பதுதான், அதிர்ச்சி செய்தி. டிவி பார்த்துக்கொண்டே குழந்தைகளைத் திட்டுவது, குடும்ப விஷயங்களைப் பேசுவது, மொபைலில் கதைப்பது என்று இவை அனைத்தையும் சம்சங் டிவி கண்காணிக்கும். இவை அனைத்தும் ‘டேட்டா கேப்ச்சர்’ மூலமாக உள்வாங்கப்பட்டு, ‘வாய்ஸ் ரெகக்னிஷன்’ ஆப்ஷன் மூலமாக மூன்றாம் நபருக்குக் கூட தெரிவிக்கப்படக்கூடும்’ என்கிற பய தகவல்களும் பரவிக்கிடக்கின்றன! அதேசமயம், பிரைவஸிக்காக, செட்டிங்ஸ் மெனுவில் உள்ள ‘வாய்ஸ் ரெகக்னிஷன்’ ஆப்ஷனை டிஸ்ஏபிள் செய்வதன் மூலம், இதைத் தவிர்க்கலாம் என்பது ஆறுதல் செய்தி!
ஆதவன் திரைப்படத்தில், ‘வைகைப் புயல்’ வடிவேலு சொல்வது போல, ‘தரையில பேசினது எல்லாம் திரையில வருது!’ என்று அதிர்சியடையும் காலம் இது!
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval