டெல்லி முதல் மந்திரியாக மீண்டும் பொறுப்பேற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கவுசம்பி பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொள்ளும் 'ஜனதா தர்பார்' நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
காலை 10 மணி முதல் 12.30 வரை வரிசையில் காத்திருந்த நூற்றுக்கணக்கான மக்கள் கெஜ்ரிவாலிடம் தங்களது கோரிக்கையை தெரிவித்து மனுக்களை வழங்கினர். கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற முந்தைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற இதைப்போன்ற மனுக்களை பெறும் முகாம்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் கூட்ட நெரிசலும், கடும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
அதனை கருத்தில் கொண்டு இன்றைய முகாமின்போது போலீசாருடன் சேர்ந்து ஆம் ஆத்மி தொண்டர்களும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
டெல்லி ஆட்சியின் தலைவர் என்ற முறையில் வாரத்தின் புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் கெஜ்ரிவால் தனது கவுசம்பி அலுவலகத்தில் தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொள்வார்.
கோரிக்கைகளின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வசதியாக குடிநீர், மின்சாரம், வேலைவாய்ப்பு என ஒவ்வொரு துறை சார்ந்த கோரிக்கைகளை முன்வைக்க தனித்தனியாக ஒருநாளை ஒதுக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம் என கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
courtesy;Malaimalar
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval