Tuesday, February 10, 2015

ஆசியாவிலேயே மிகப்பெரிய விமான கண்காட்சி; பெங்களூருவில் நடக்கிறது

JP-airshow_SL_9_2_2011இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பெங்களூருவில் நடந்து வரும் விமான கண்காட்சி ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும். அந்த வகையில், இந்த ஆண்டு 10-வது சர்வதேச விமான கண்காட்சி பெங்களூருவில் உள்ள யெலகன்கா ஏர் போர்ஸ் ஸ்டேஷனில் வரும் 18-ந்தேதி துவங்குகிறது. 5 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைக்கிறார்.


இந்த கண்காட்சியில் விமானம் தயாரிக்கும் 328 வெளிநாட்டு கம்பெனிகள், 295 இந்திய கம்பெனிகள் கலந்து கொள்கின்றன. குறிப்பாக, பிரான்ஸை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான டாஸால்ட்டுடன் 126 விலை மதிப்பு மிக்க ரேபல் பைட்டர் பிளேன்களை வாங்கும் திட்டமும் கையெழுத்தாகிறது. சென்ற காங்கிரஸ் ஆட்சியில் ஹெலிகாப்டர் ஊழலில் சிக்கிய பின்மெக்கானிக்கா நிறுவனமும் இதில் கலந்து கொள்கிறது. இந்த ஏரோ ஷோவில் பிரதமர் மோடி ரபேல் பைட்டர் பிளேனை ஓட்டி நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval