தமிழகத்தின் தினசரி மின்சாரம் தேவை 12 முதல் 13 ஆயிரம் மெகாவாட் வரை உள்ளது. ஆனால், 11 ஆயிரம் மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்ய முடிகிறது. இந்த மின் உற்பத்தி குறைவே தமிழக மின்வாரியம் நஷ்டத்தில் இயங்க முக்கிய காரணம் என்கின்றனர். அதாவது, தமிழகத்தில் அனல் மின்நிலையங்கள் முழு உற்பத்தியை மேற்கொள்வதில்லை. இதனால்தான் மின் பற்றாக்குறை அதிகரித்து, மின்வாரியம் நஷ்டத்தில் இயங்குகிறது. இந்த நிலை நீடித்தால், ஆண்டுதோறும் 15 சதவீத மின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாகி விடும் என்றும் தமிழ்நாடு மின் பொறியாளர்கள் அமைப்பினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதன் தலைவர் காந்தி கூறியதாவது: மொத்த மின்தேவையில் இருந்து 3 சதவீதம் மட்டுமே தனியாரிடம் இருந்து ஒரு யூனிட் யி12.50க்கு வாங்கியதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் இந்தாண்டு மின் தேவை வளர்ச்சி 20 சதவீதமிருக்கும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் இந்த 3 சதவீத மின்சாரம் தான் தற்போதைய 15 சதவீத மின் கட்டண உயர்வுக்கு காரணமாகும்.
அதாவது 3 சதவீதம் மின்சாரம் (295 கோடி யூனிட்) கொள்முதல் விலை யி3 ஆயிரத்து 687.5 கோடி யாகும். இது பயனீட்டாளர் முனையில் யி5 ஆயிரத்து 512.8 கோடியாகிவிடும். மின் கட்டணம் மூலம் யி1,220 கோடி மட்டும் தான் கிடைக்கிறது. ஆக நஷ்டம் யி4,293 கோடி. மேலும் 2014ல் துவங்கப்பட்ட மேட்டூர் (600 மெகா வாட்), வடசென்னை (1200 மெகாவாட்), வல்லூர் (1500 மெகாவாட்) அனல்மின் நிலையங்கள் உற்பத்தி படுமோசமாக உள்ளது. குறிப்பாக மேட்டூர் 600 மெகா வாட்டுக்கு பதிலாக 400 மெகாவாட் மட்டுமே உற்பத்தி ஆகிறது. அதே போன்று வல்லூர் 1500 மெகாவாட் கூட்டு முயற்சியில் 1000 மெகாவாட் உற்பத்தியே செய்யப்படுகிறது. இன்னும் 3வது யூனிட்டில் உற்பத்தி துவங்கவில்லை. இது தொடருமேயானால் ஆண்டு தோறும் 15 சதவீத மின் கட்டண உயர்வு என்பது தவிர்க்க இயலாததாகிவிடும் என்றார்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval