பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் கில் தற்போது பல கோடிப்பேர் தங்களுக்கென்று தனி கணக்கு வைத்திருக் கிறார்கள். உயிரோடு இருக்கும் வரை அவர் தன் பக்கத்தை நிர்வகிக்கலாம். ஆனால் அவர் இறந்த பிறகு அவரது பக்கம் நிர்வகிக்க ஆளில்லாமல் அனாதர வாக இருக்கும். சில நாட்கள் முன்பு வரை இந்த நிலை இருந்தது.
ஆனால் கடந்த 12-ம் தேதி பேஸ்புக் நிறுவனம் ஒரு புதிய ஏற்பாட்டை அறிமுகப்படுத்தியது. அதன் மூலம் தற்போது உயிருடன் இருக்கும் பேஸ்புக் பயனாளர் ஒருவர், தான் இறந்த பிறகு தன் பக்கத்தை யார் நிர்வகிக்கப் போகிறார் என்பதைக் குறிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வசதி மூலம் தன் நண்பர்கள், உறவினர்கள் என யாரை வேண்டு மானாலும் சட்டப்பூர்வமாக நியமிக்க லாம். அவர் இறந்த பிறகு அவரால் நியமிக்கப்பட்ட பேஸ்புக் பயனாளர் ஒருவர், முன்னவரின் பேஸ்புக் பக்கத்தை நிர்வகிப்பார்.
இதன் மூலம், இறந்துபோனவருக்கு அறியாமல் யாரேனும் நட்பு விண்ணப்பம் கொடுத்திருந்தால் அதை ஏற்கவோ, நிராகரிக்கவோ செய்யலாம். மேலும் இறந்துபோனவரின் நினைவை அனு சரிக்கும் வகையில் அஞ்சலி செய்திகள் போன்றவற்றையும் பதிவிடலாம்.
பேஸ்புக் அறிமுகம் செய்திருக்கும் இந்த வசதி முனைவர் பட்ட ஆய்வாளர் ஒருவர் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் இர்வைன் பகுதியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக கிளையில் கணினித் துறையில் ஜேட் ப்ருபேக்கர் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, "தற்போது வரை பேஸ்புக்கில் ஒரு வருக்குக் கணக்கு இருந்தால், அவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது இல்லையா என்பது தெரியாது. ஆனால் இனி வரும் காலங்களில் இறந்த போன ஒருவரின் பேஸ்புக் பக்கத்தில் அவரின் பெயருக்கு முன்னால் ‘ரிமெம்பரிங்' (நினைவில் உள்ள) எனும் வார்த்தை சேர்க்கப்பட உள்ளது. அதன் மூலம் பேஸ்புக் பயனாளர் ஒருவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது தெரிந்துவிடும். இது அனாவசி யமான குழப்பங்களைத் தவிர்க்கும்" என்றார்.
courtesy;The Hindu Tamil