Saturday, February 21, 2015

இந்த ஆண்டு 1500 ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகமாகிறது..!

smartphones-and-tabletsஇந்தியாவி்ல் தற்போது சாம்ஸங், மைக்ரோமேக்ஸ் தவிர ஜியோமி, ஏசஸ், மோட்டரோலா, ஓபி உள்ளிட்ட மொபைல் போன் பிராண்டுகள் அதிகரித்து வருகிறது.
2013-ம் ஆண்டு 957 மொபைல் மாடல்கள் வெளிவந்தன. சென்ற ஆண்டு 1,137 மாடல்கள் அறிமுகமானது. அதேபோல், இந்த ஆண்டு இந்தியாவில் 1500 ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகமாகும் என பிரபல Tech Review வெப்சைட்டான 91mobiles.com தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை விட இது 20 சதவீதம் அதிகமாகும்.
இந்திய சந்தையில் ஜியோமி, மோட்டரோலா, ஏசஸ் பிராண்டுகள் காலூன்ற தீவிரமாக உள்ளது. வாடிக்கையாளர் மனதை கவர பல மாடல்களை இந்த நிறுவனங்கள் போட்டி போட்டு வெளியிட்டு வருகின்றன. ஏற்கனவே, கடந்த 2013, 2014 ஆண்டுகளில் இரண்டாவது அல்லது 3-வது முறையாக ஸ்மார்ட்போன்களை வாங்கியவர்கள் தற்போது ஹையர் எண்ட் போன்களுக்கு மாறி வருகிறார்கள்.
91mobiles.com வெப்சைட் இதுவரை 20 ஆயிரம் மொபைல் மற்றும் டேப்லட்டுகளை அலசி ஆராய்ந்துள்ளது. இதுவரை 40 மில்லியன் பேர் இந்த வெப்சைட்டை பார்வையிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval