Tuesday, April 4, 2017

தன்னை காப்பாற்றிய சிப்பாயை 60 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்தார் தலாய் லாமா

தலாய் லாமா60 வருடங்களுக்கு முன் திபத்திலிருந்து தப்பித்து இந்தியாவில் தஞ்சம் அடைந்த போது, தனக்கு பாதுகாப்பு அளித்த இந்திய சிப்பாயை செவ்வாய்க்கிழமை சந்தித்தார் தலால் லாமா.
படத்தின் காப்புரிமைAFP
இந்தியாவின் வட கிழக்கு பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள திபெத்தைச் சேர்ந்த, 81 வயது ஆன்மீகத்தலைவரான தலாய் லாமா, நரேன் சந்திர தாஸ் என்ற 79 வயது சிப்பாயை சந்தித்தார்
"உங்களது முகத்தை பார்த்தவுடன்; நான் உணர்கிறேன் எனக்கும் வயதாகிவிட்டது" என்று அவர் தெரிவித்தார்.
சீன ஆட்சிக்கு எதிரான தோல்வியுற்ற திபெத்திய எழுச்சிக்கு பிறகு, லாசாவிலிருந்து இரண்டு வார காலமாக மலைகளை கடந்து, கடினமாக பயணம் செய்தபின் முதல்முறையாக 1959 ஆம் ஆண்டு இந்த சிப்பாயை சந்தித்தார் தலாய் லாமா.
இந்தியாவின் உதவியை பெறுவதாக உறுதி பெற்றப்பிறகு, சிப்பாய் போன்று வேஷமிட்டு கொண்டு தனது சிறிய ஆதரவாளர்கள் குழுவுடன் இந்திய எல்லைக்குள் நுழைந்தார் தலாய் லாலாமா.
சுதங்போவிலிருந்து தலாய் லாமாவை அழைத்து வந்த துணை ராணுவப் படையான அசாம் ரைஃவல்ஸின் சிப்பாய்கள், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சக்தியில் அவரை எங்களிடம் ஒப்படைத்தனர் என தெரிவித்துள்ளார் அசாம் ரைஃவல்ஸின் ஓய்பு பெற்ற உறுப்பினரான தாஸ்.
ஓய்வுப் பெற்ற உறுப்பினரான தாஸ் என்று தெரிவித்தார்.
தலாய் லாமாபடத்தின் காப்புரிமைAFP
"நாங்கள் அவரை லுங்கலாவிற்கு அழைத்துச் சென்றும் அங்கிருந்து மற்றொரு பாதுகாவலர்களுடன் அவர் டவாங்கிற்கு அழைத்துக் கொண்டுச் செல்லப்பட்டர்" என்று அவர் தெரிவித்தார்.
திபத்திய ஆன்மீக தலைவரான தலாய் லாமாவிடம் படைகள் பேச அனுமதிக்கப்படவில்லை. எங்களது கடமை, அவரின் பயணத்தில் அவரை பாதுகாத்து அவருடன் உடன் செல்வதாகமட்டும் இருந்தது
இந்தியாவிற்குள் தன்னை பத்திராமாக கூட்டிச் சென்ற குழுவின் ஒரு பகுதியை சந்தித்ததில் தான் "மிக மிக மகிழ்ச்சியுற்றதாக" சிப்பாய்களுக்கு நன்றி தெரிவித்தார் தலாய் லாமா.
தப்பி வந்த பிறகு, தற்போது திபத்திலிருந்து தப்பித்து வருபவர்களுக்கு இருப்பிடமாக இருக்கும் தரம்சாலாவில் தங்குவதற்கு முன், டவாங்கில் உள்ள மடத்தில் சிறிது காலம் தங்கினார் தலாய் லாமா.
இந்த வாரத்தில் அந்த மடத்திற்கு சென்று உரையாற்றவுள்ளார். அருணாச்சல பிரதேசத்தை சொந்தம் கொண்டாடும் சீனாவை, தலாய் லாமாவின் வருகை கோவப்படுத்தியுள்ளது.
முன்னதாக, எல்லை பிரச்சனையை மேலும் தீவிரமாக்கும் வகையில் இந்தியா எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும்,தலாய் குழுவைச் சேர்ந்த பிரிவினைவாத ஆர்வலர்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்றும் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval