காளஹஸ்தி அருகே ஆற்று மணல் அள்ளுவதை கண்டித்து மக்கள் நடத்திய போராட்டத்தில் லாரி புகுந்ததில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் காளஹஸ்தியை அடுத்த ஏர்பேடு என்னுமிடத்தில் உலகலதெரு பகுதியை சேர்ந்த மக்கள், தங்கள் பகுதி ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்க வலியுறுத்தி காவல் நிலையம் முன் 50-க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே வந்த லாரி நிலைதடுமாறி அருகிலுள்ள மின்கம்பம் மீது மோதி போராட்டக்காரர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 16 பேர் உயிரிழந்தனர்.
மேலும் இந்த போராட்டத்தை செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் இருவர் மற்றும் உதவி ஆய்வாளர் ,காவலர் உள்ளிட்ட 18 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் திருப்பதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
courtesy;news7
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval