Tuesday, April 18, 2017

ஆக்சிஜனை பூமியில் இருந்து முற்றிலுமாக நீக்கி விட்டால் என்னாகும்?*

 


Image result for oxygen images
                                      படித்ததில் பிடித்தது ... அருமையான விழிப்புணர்வு  பதிவு ....

'இப்ப எதுக்கு இப்படி ஒரு விபரீதமான ஆசை 'னு கேக்கறீங்களா...  காரணம் இருக்கு அதை கடைசியா சொல்றேன் இப்ப விடை சொல்லுங்க பாஸ்
...

"இதென்ன கேள்வி எல்லா உயிரினங்களும் அழிந்து போகும் "
என்கிறீர்களா...?
சரி...நான் சொல்வது வெறும் ஐந்து நொடிகளுக்கு மட்டும் என்றால்?

'அப்படி என்றால் ரொம்ப பயப்பட தேவை இல்லை என்ன ...எல்லோரும் கூவத்தை கடந்து போறா மாதிரி ஒரு ஐந்து நொடி மூச்சை இழுத்து பிடித்து கொண்டால் முடிந்தது பெரிசா ஆபத்து ஒன்னும் இல்லை ' என்பது உங்கள் பதிலாக இருக்குமேயானால்..
இனி சொல்ல போகும் அனைத்தும் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.

கருப்பு வானம் :

வானம் பகல் நேரத்தில் இவ்வளவு ஒளியுடன் பிரகாசமாக காட்சி அளிப்பதற்கு காரணம் ஒளி சிதறல் அதாவது ஒளி வளிமண்டல ஆக்சிஜன் மூல கூறு மற்றும் தூசு களில் பட்டு மீண்டும் மீண்டும் எதிரொளிப்பது..
இப்போது ஆக்சிஜனை நீங்கள் நீக்கி விட்டதால் வானம் கருகும் னு இருட்டா கருப்பா ஆயிடும்..  மேலும் இப்போது பார்ப்பதை போல அணைத்து இடத்திலும் வெளிச்சமாக இல்லாமல் யாரோ LED பல்ப் போட்டாபோல  வெளிச்சம் ,குவிக்க பட்ட நிலை யில் கிடைக்கும்.(சும்மாவே பத்தரை மணிக்கு எந்திரிப்பவங்க இன்னும் விடியலை போல னு திரும்ப தூங்க போக வேண்டியது தான்)

இடியும் கட்டிடங்கள் :

நீங்கள் கண்ணால் பார்க்க கூடிய கான்க்ரீட் ஆல் ஆன எந்த கட்டிடமும் ... அது வீடோ பாலமோ... எல்லாமே மன்னால் பண்ணி வைத்தது போல பொல பொல வேண உதிர்ந்து போகும். காரணம் கான்க்ரீட் கலவையில் முக்கிய பிணைப்பு ஆக்சிஜன் தான்.(சும்மாவே நமூர்ல அரசியல் வாதிங்க கட்டற கட்டிடம் பாலம் எல்லாம் அப்பப்போ ஆக்சிஜன் இல்லாத மாதிரி விழுந்து கொண்டு தான் இருக்கிறது) 

ஆவியாகும் கடல் :

தண்ணீர் என்பது  ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் கலந்த கலவை னு நமக்கு தெரியும் .. எனவே அதில் உள்ள ஆக்சிஜனை மட்டும் நீக்கி விட்டால் மீதி இருப்பது ஹைட்ரஜன் ....அதாவது வாயு.
அதுவும் அது எப்படி பட்ட வாயு..? பறக்கும் பலூன் ஏன் பறக்குது? ஆம் அதே தான் அதுக்குள்ள இருப்பது மிகவும் லேசான தனிமம் ஆகிய ஹட்ரோஜன் . எனவே மொத்த கடலும் ..ஏரி ..குளம் எல்லா நீர் நிலையும் ஆவி யாகி வானதுக்கு போய்டும் . (மேட்டர் தெரியாம மெரினா போனவன் கடல காணாம கம்ப்லைன்ட் கொடுக்க வேண்டியது இருக்கும்)

நிற்கமுடியா நிலம் :

பூமியின் மேலடுக்கின் கட்டுமானத்தில்  ஆக்சிஜன் முக்கிய பங்கு வகிப்பதால் அது முழுவதும் கட்டி பட்டு நிற்கும் தன்மை போய்.. புதை மணலில் நிற்பதை போல உள் வாங்கி கொள்ளும். நிற்க நிலம் கிடைக்காது.. (நிக்க நேரம் இல்லனா சமாளிக்கலாம் நிற்க நிலமே இல்லனா என்ன பண்றது?)

சுடும் சூரியன்:

குறிப்பா சூரியன் சுட்டெரிக்கும்.
இதெனப்பா ஆச்சர்யம் அது தினம் சுட்டுகிட்டு தானே இருக்கு என்று நினைக்காதீர்கள் நான் சொல்வது அடுப்பில் வடை சுடுவதை போல..... 
சூரியனில் உள்ள புறஊதா வை ஓசோன் (o 3 ) தான் வடி கட்டி அனுப்புகிறது அதில் உள்ள ஆக்சிஜன் நீக்க பட்டால் அதன் பின் சூரிய ஒளியில் நிற்கும் யாவரும்  தந்தூரி சிக்கன் தான்.

உள் காது கோவிந்தா :

நம்ம காது குள்ள ஒரு நிலை நிறுத்தும் அமைப்பு ஒன்னு இருக்கு அதன் வேலை நம்மை சுற்றி அழுத்த மாறுபாடு ஏற்பட்டால் அதனால் நாம் பாதிக்க படாமல் இருக்க நம்மை சமன் நிலையில் வைபதர்காக அழுத்த மாறுபாட்டை பராமரிப்பது. ஆனால் ஆக்சிஜன் நீக்க பட்டதால் வளிமண்டல காற்று அளவு 21 சதம் திடீரென குறைந்து போய்.. அழுத்தம் கணிச மான அளவில் குறைந்து விடுவதால் மிக பெரிய அழுத்த மாறுபாட்டை சமாளிக்க முடியாமல் அனைவரின் உள் காதுகளும் வெடித்து சிதறும் ...ஹலோ நான் சொல்றது கேக்குதா....ஹலோ.... ஹலோ....??

இயங்காத இன்ஜின்கள்:

ஆட்டோ தொடங்கி ஆட்டோமேட்டிக் விமானம் வரை.. ரோடு ரோலர் இன்ஜின் முதல் ராக்கெட் இன்ஜின் வரை எந்த எரிபொருளில் இயங்கும் இன்ஜினானாலும் அதில் எரிக்க படுவது ஆக்சிஜன் தான் என்பதால் நாம் திட்டமிட்ட அந்த ஐந்து வினாடிகளில் பறக்கும் விமானம் .. ஓடும் கார் பைக் எதுவானாலும் அங்கங்கே  இயங்காமல் நிற்கும் . (தலைக்கு மேல் விமானம் பறந்து கொண்டிருந்தால் கொஞ்சம் தள்ளி நின்று கொள்வது தலைக்கு நல்லது)

ஒட்டிக்கொள்ளும் உலோகங்கள் :

குளிர் வெல்டிங் முறை பற்றி உங்களுக்கு தெரியுமா? அதில் இரண்டு உலோகங்களுக்கு இடையில் உள்ள காற்றை நீக்கி வெற்றிடம் உண்டு பண்ணுவார்கள் அப்படி செய்தால் அந்த உலோகம் வெல்ட் பண்னாமலேயே வெல்ட பண்ணது போல ஒன்றோடு ஒன்னு ஒட்டி கொள்ளும்.
சாதாரணமாக உலோகங்கள் அப்படி ஒட்டி கொள்ளாமல் இருக்க காரணம் அவைகளின் மேலே ஆக்சிடைசின் பூச்சு  இயற்கையாகவே ஒரு மேல் அடுக்கு போல பரவி இருப்பது தான் .அதில் மேல் சொன்ன ஆக்சிஜன் நீக்கம் நடந்தால் உலோகங்கள் தானாகவே ஒன்றோடு ஒன்று வெல்ட் பண்ணிக்கொள்ளும்.
இப்ப சொல்லுங்க...
பூமியில் ஐந்து நொடி.... ஐந்தே ஐந்து நொடி பிராணவாயு இல்லாமல் உங்களால் இருக்க முடியுமா..?
நிச்சயமாக முடியாது அல்லவா...
இதையெல்லாம் எதுக்கு சொல்கிறேன் என்றால்.....
அப்படி பட்ட பிராணவாயுவை 100 தொழிற்சாலை உற்பத்தி பண்ண முடியாத ஆக்சிஜனை ஒரு மரம் உற்பத்தி பண்ண முடியும் ..

எனவே

"மரம் வளர்ப்போம் ஆக்சிஜன் பெருக்குவோம் "
தகவல் ;இர்ஃபான்

Inline image





No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval