Monday, April 17, 2017

ஃபேஸ்புக் லைவை ஓடவிட்டு கொலை! அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

அமெரிக்காவில் இருக்கும் க்ளீவ்லேண்ட் நகரத்தில், முதியவர் ஒருவரை, இன்னொருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, அந்த சம்பவத்தை ஃபேஸ்புக் லைவ்மூலம் பதிவுசெய்துள்ளார். கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்கு அந்த ஃபேஸ்புக் லைவ் வீடியோ, இணையத்தில் இருந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. ஒரு முதியவரைக் கொல்லும் கொடூரச் சம்பவத்தை ஃபேஸ்புக் லைவில் பதிவேற்றியது, அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலையைச் செய்தவன், ஸ்டீவ் ஸ்டீஃபன்ஸ் என்ற பெயருடையவனாக இருக்கலாம் என போலீஸ் சந்தேகப்படுகிறது. அந்தக் கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது போலீஸ். அந்த ஃபேஸ்புக் லைவ் வீடியோவில், முதியவரைக் கொலை செய்தபின்,   'இதற்கு முன்பும் நான் நிறைய கொலைகள் செய்துள்ளேன்' என்று பேசியுள்ளான். போலீஸ் அது குறித்தும் கூடுதலாக விசாரணை நடத்தி வருகின்றது.
கொலையாளி தற்போது, ஆயுதங்களுடன் காரில் பயணம்செய்திருக்கலாம் என்றும் அவன் ஆறடி உயரம் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ள போலீஸ், அவனைப் பார்த்தால், தன்னந்தனியாகப் பிடிக்க முயலாமல், அவசர எண்ணுக்கு அழைக்குமாறு உள்ளூர் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. தற்போது, இந்தக் கொலையைச் செய்ததாகச் சந்தேகப்படும் நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது போலீஸ்.
courtesy ;vikadan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval