கத்தார் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அந்நாட்டு பிரஜைகளை இலங்கைக்கு ஆரோக்கியம் கருதி போக வேண்டாம் என்று எச்சரிக்கை செய்துள்ளது. வெளிநாட்டு விவகார அமைச்சின் உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது:?.
இலங்கையில் தற்போது நிலவும் மோசமான H1N1 - பன்றிக் காய்ச்சலே முக்கிய காரணம் என்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய மாகாணம் பகுதி கணிசமான அளவு இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் உள்ளகத் தகவல் தெரிவிக்கின்றன. குறிப்பாக மத்திய மாகாணம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப்பிரயாணிகள் அதிகமாக பயணிக்கும் கண்டி பிரதேசமும் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ளது. அத்துடன் பிரபல்யமான பேராதெனிய பல்கலைக்கழகம், பேராதனைப் பூங்கா போன்றவை இந்த மத்திய மாகாணத்திலேயே அமைந்துள்ளது.
நிலைமைகள் சீராகும் வரை அத்திய அவசிய தேவையின் யாரும் இலங்கைக்கு செல்ல வேண்டாம் என கத்தார் நாட்டு மக்களைக் கேட்டுள்ளது.
நிலைமைகள் சீராகும் வரை அத்திய அவசிய தேவையின் யாரும் இலங்கைக்கு செல்ல வேண்டாம் என கத்தார் நாட்டு மக்களைக் கேட்டுள்ளது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval