மும்பை சயான் கோலிவாடா பகுதியை சேர்ந்த ரோசிக்கும் மற்றும் வெங்கடேஷ் (வயது23) என்ற வாலிபருக்கும் இடையே கடந்த 9-ம் தேதி இரவு தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றியதில் கடும் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் கத்தியை எடுத்துவந்து ரோசியை குத்த முயன்றார். எனவே ரோசி அந்த பகுதியில் வசித்து வரும் சுமதி(26) என்பவரின் வீட்டிற்குள் நுழைந்தார். சுமதி, வெங்கடேசை தடுத்து நிறுத்தி உள்ளார். மேலும் வீட்டில் இருந்து வெளியே போகுமாறு கூறினார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ், சுமதியை கத்தியால் குத்த முயன்றுள்ளார்.
வீட்டில் நடப்பதை எல்லாம் சுமதி செல்லமாக வளர்த்த நாய் லக்கி பார்த்து கொண்டு இருந்தது. வெங்கடேஷ் தனது எஜமானியை கத்தியால் குத்த முயல்வதை பார்த்த லக்கி, அவர் மீது பாய்ந்தது. மேலும் அவரது கையில் இருந்த கத்தியை பறித்து எஜமானியை காப்பாற்ற நினைத்தது. லக்கி தன் மீது பாய்ந்ததால் ஆத்திரமடைந்த வெங்டேஷ் தான் வைத்திருந்த கத்தியால் அதை குத்தினார். எனினும் லக்கி காயத்தை பொறுத்து கொண்டு வெங்கடேசை வீட்டில் இருந்து துரத்தியது.
இந்தநிலையில் கத்தி குத்தில் காயமடைந்த நாய் லக்கி பரிதாபமாக உயிரிழந்தது.
இதுகுறித்து சுமதி கூறும்போது, தாய், தந்தையை இழந்த எனக்கு பாதுகாவலனாய் நாய் லக்கி இருந்தது. எனது அண்ணன் வேலைக்கு சென்ற பிறகு பகல் முழுவதும் அது தான் என்னுடன் இருக்கும். தற்போது எனது வீட்டில் ஒருவர் உயிரிழந்ததாகவே உணர்கிறேன். மிகவும் வேதனையாக உள்ளது என உருக்கமாக கூறினார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வெங்டேசை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர். எஜமானியை காப்பாற்ற நாய் உயிரைவிட்ட சம்பவம் சயான் கோலிவாடா மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
courtesy Daily Thanthi
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval