Thursday, April 20, 2017

படித்ததில் சிரித்தது -

Image result for cars imagesஒரு தம்பதிக்கு மூன்று    மகள்கள். 

மூவருக்கும் 
திருமணம் ஆகிவிட்டது. மருமகன்களின் அன்பை 
பரிசோதிக்க மாமியார்
விரும்பினார்
😇😇😇
      அதற்காக ஒரு நாடகத்தை நடத்த எண்ணி
        முதலாவது மகள் மற்றும் மருமகனுடன்
ஒரு ஏரியில் படகு சவாரி
செய்தார்.⛵🚤⛴🛳

    தான் திட்டமிட்டபடி ஏரியில் விழுந்து உயிருக்கு போராடுவதாய் நடித்தார். 
    இதையறியா மருமகன் உடனே தண்ணீரில் குதித்து மாமியாரைக் காப்பாற்றினார். 

🚣🏊

    அடுத்த நாள் காலை படுக்கையை விட்டு வெளியே வந்த மருமகன் வாசலில் ஒரு புத்தம் புதிய மாருதி desire கார் இருப்பதைக் கண்டார்.
🚘

    அருகில் சென்று பார்த்தார். அதில் மாமியாரின் அன்புப் பரிசு என்று இருந்தது. 👒

    இதே போல் இரண்டாவது மருமகனையும் சோதித்தார்.
  அவரும் முதல் மருமகனைப் போலவே
செய்ததால் அவருக்கும் ஒரு மாருதி desire கார் பரிசாக வழங்கினார். 
🚖

  முன்றாவது மருமனுக்கும் இதே சோதனை.
    திட்டமிட்டபடி தண்ணீரில் விழுந்து தவித்தார். மாப்பிள்ளை கண்டுகொள்ளவேயில்லை.😗😐😑
    மாமியார் கெஞ்சினார். 
ம் ஹும். 
  பார்க்காதது போல் இருந்தார்.

    மாப்பிள்ளை காப்பாற்றுங்கள்.. இன்னோவா கார் வாங்கித் தருகிறேன் என்று சொன்னார்.🙇

    காரும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்.. பொண்ண வளக்க சொன்னா பேய்ய  🙎👹 வளர்த்திருக்கிற...சாகுன்னு சொல்லிட்டு திரும்பிப் பார்க்காமல் வீட்டுக்கு வந்துவிட்டார்.
🏃🚶🏃🚶🏃🚶🏃🚶🏃
  மாமியார் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டார். 
    அடுத்த நாள் காலை படுக்கையை விட்டு வெளியே வந்து பார்த்தால்....
    ஒரு புத்தம் புதிய BMW  கார் வாசலில் நின்றது. 
    அருகில் சென்று பார்த்தால்.. .............🚖

👌👌✌👍👏👋🙌👮
மாமனாரின் அன்புப் பரிசு என்றவாசகம் காரில் தொங்கியது.😜😜😜

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval