தமிழகத்தில் டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் காவிரி நீரை தர மறுக்கிறது கர்நாடகா அரசு. பல ஆண்டுகளாக தொடரும் இந்த பிரச்சனையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் தண்ணீர் தர முடியாது என கர்நாடகா அரசு அடம் பிடிக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் ஊட்டியில் இருந்து தண்ணீர் செல்லும் மோயர் ஆற்றின் குறுக்கே அணையை கட்டினாலே போதும். கர்நாடகாவிடம் கையேந்தும் நிலை வராது. தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்பு இதுதான்.
வெண்ணெய்யை கையில் வைச்சிகிட்டு நெய்க்கு அலைந்த கதையாக இதுவரை இப்படி ஒரு வழி இருப்பதை தெரிந்தோ, தெரியாமலோ நமது ஆட்சியாளர்கள் இருந்து விட்டனர். இனிமேலும் வாய்பொத்தி மௌனமாக இருந்தால் தமிழகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்.
தற்போது இந்த கோரிக்கையானது தமிழகம் முழுக்க வலுத்துள்ளது. விவசாயிகள் போராட்டம் நடந்து வரும் இந்த வேளையில் வறட்சியை போக்கி நீர்வளத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஊட்டியில் அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை தமிழர்களிடையே பரவி வரும் தகவல் கர்நாடகா அரசிற்கு எதிர்பாராத அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தற்போது வைரலாக பரவி வரும் இந்த பிரச்னையை தமிழக இளைஞர்கள் கையில் எடுத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு புரட்சி போல் மீண்டும் ஒரு புரட்சி ஏற்பட்டால் தான் தமிழகத்திற்கு விடிவு பிறக்கும் என்றால் நாங்கள் தயார் என்று இளைஞர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இனியாவது தமிழக அரசு புரிந்து கொண்டு நமது நீர் நமக்கே என்கிற முறையில் ஊட்டியில் அணைக்கட்டி விவசாயிகளின் வாழ்வில் செழிப்பை உண்டாக்க வேண்டும் என்று எதிர் பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval